எனக்கு நானே விந்தை

எனக்கு நானே விந்தை
எனக்குள் ஏனோ இச்சிந்தை

அதிகாலை எழத்தான் ஆசைப்பட்டேன்
அலாரமும் வைய்தே தூங்கிவிட்டேன்
எழுந்தது என்னவோ ஏழு மணிக்குத்தான்
எழ நினைத்ததும் நானே
எழ மறுத்ததும் நானே

தினமும் காலை உடற்பயிற்சி
தேகத்திற்கு புத்துணர்ச்சி
சிந்தை எல்லாம் சரிதான்
செய்வது மட்டும் இல்லையே

காய்களும் பழங்களும்
காயத்திற்க்கு(உடலுக்கு) நல்லது
ஆனால் எச்சில் ஊறுவது என்னவோ
பிரியாணிக்கு மட்டும் தான்

எண்ணியதை பேசத்தான் எண்ணம் ஆனால்
பேசும்போது வரவில்லை திண்ணம்

பேரின்பமே பெருவாழ்வு ஆனால்
சிற்றின்பத்தையே சிந்தை நாடுது

எனக்கு நானே விந்தை
எனக்குள் ஏனோ இச்சிந்தை

சிந்தைபடி செயல்பட
மனதை வென்றுபார்
மகிழ்ச்சிதான் என்றும் பார்.

எழுதியவர் : கோ.கலியபெருமாள் (21-Jul-17, 8:39 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
பார்வை : 273

மேலே