குளிரைத் தொலைக்காதே பௌர்ணமியே

இயல்பாயிரு
உறுத்தல் தவிர்க்க
இமைத்தல் போல

இயல்பாயிரு
உறங்கும்போதும்
சுவாசித்தல் போல

குற்றமற்ற மனதில்
அச்சத்தின் ரேகை
படர்வதில்லை

உண்மை
இருட்போர்வை
தேடுவதில்லை

பயணப்படு
ஒரு
நதியைப்போல

முட்புதர்களை
தழுவிப் போவதால்
தண்ணீர்
காயப்படுவதில்லை

மறைப்பதற்கு
எதுவுமில்லையென்றால்
வெளிச்சம் கண்டு
அச்சமெதற்கு

வெளியே வா
ஒரு
பௌர்ணமியைப்போல

உன் குளிரியல்பு தொலைத்தல்
எனக்குச் சம்மதமில்லை
ஆனாலும்
சொல்லவில்லை
குத்தீட்டி
கொண்டுவாவென

எழுதியவர் : Elavenmaniyan (22-Jul-17, 12:05 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 82

மேலே