நெல்லுக் கிறைத்தநீர்
![](https://eluthu.com/images/loading.gif)
எதிர்பார்ப்புகளும் ஏங்குதே ;
ஏமாற்றத்தில் வீழ்குதே !
எதேச்சைகள் கூட இப்போ ;
ஏணியாய் அமையுதே !
துவைக்கும் துணிகளில் ;
கரையும் கறையுதே !
கைகளில் அழுக்கும் ;
காணாமல் போகுதே !
செல்லா காசான செடிகளும் ;
செழிப்பாய் வளருதே !
நெல்லுக்கிறைத்த நீரில் ;
நெஞ்சை நிமிர்க்குதே !
கருப்பு ஆடுகளும் ;
கலக்கத்தில் மாறுதே !
கபடமில்லா உள்ளம்கண்டு ;
கவலையிலே முழ்குதே !
எச்சமென நீ ஒதுக்கும் ;
மிச்சமெல்லாம் துச்சமே !
அச்சம் கலைந்த பறவைகளுக்கு ;
அடி வயிறும் நிரம்புதே !