சுகப்பிரசவம்

பிரசவம்....

குழந்தைக்கு முதல் பிறப்பு
தாய்க்கு இன்னொரு பிறப்பு....

சுகமாக வாழ சுகப்பிரசவம் அவசியம்
கருப்பை புனிதம் பாதுக்காப்பு முக்கியம்..

காற்றில்
கரைந்த மேகம்
மழையாய்
தருகிறது
இயற்கை.....

கடலுடன் சேர்ந்து
அலைகள் நுறைகளை
தருகிறது
இயற்கை.......

இயற்கை அனைத்தும்
இயற்கையாய்
வாழவே
இயற்கையுடன்
வாழும்
நீ
இன்பமின்றி
இருக்கலாமா....

இறைவம்
படைப்பில்..

மென்மையான பெண்களும்
புனிதமாவர்
புனிதமான கர்பபையை
பெற்றதால்......

உயிர் கொடுத்து
ஈன்ரேடுக்கும்
உன்னதமே
படைப்பதால்
நீயும்
கடவுளே.....

பத்து மாதங்கள்
சுமந்து
பலக் கனவுகள்
நீயும் கண்டு
கிழித்துக் கொண்டு
பிறக்கத்தானா.....

கத்திக் கொண்டே பிறக்கிரேன்
கத்தியால் பிறந்ததாலோ.....

சுகமாக பிறக்க நினைத்தாய்
சுகப் பிரசவத்தை
ஏன்
மறந்தாய்...

வலியுடன் பெற்றுப் பார்
சுகமதிகம்...

இடுப்பு வலி பொறுத்து
ஈன்ரேடுத்துப் பார்
இன்பமதிகம்......

கற்பை காக்கும் நாட்டில்
கருப்பையையும்
பாதுகாப்பது
அவசியம்.....

உடல் வலிமை இல்ல பெண்களும்
கருப்பை வலிமைப் பெற வேண்டும்....

தாய் சேயை பெற்றதும்
தன்னை மறந்து மகிழ்கிறால்
என்றும்
நலமுடன்
வாழ
இறைவனை வணங்குகிறால்....

ஈன்றேடுக்கும் சேயை
நீ
சுகப்பிரசவத்தில் ஈன்றிடு.....
பல நோய்கள் அதற்கில்லை துரத்திடு.....

தங்கத்தை தோண்டி எடுக்கலாம்....
வைரத்தை வெட்டியும் எடுக்கலாம்....

தனக்கான கருவையும்
தான் சுமந்த உயிரையும்
அறுத்து
நீயும்
பெறலாமா.....

பிரசவத்தை
உன்
வசம்
ஆக்கு.....

சுகப்பிரசவத்தில் பெற்றுப்பார்
சுகமதிகம் அடைந்துப்பார்....

சுகத்துடனும் நலமுடனும்
நாம்
பிறக்க
சுகப்பிரசவம் அவசியம்.....

இயற்கையுடன் வாழ்ந்து
இயற்கையாக
உதிக்க
சுகப்பிரசவத்தை கையால்வோம்...

கருப்பையை சுத்தமாக வைத்து
சுகமாக
சுகப்பிரசவம் அடைய முயற்ச்சிப்போம்,......

எழுதியவர் : கா.திவாகர் (5-Sep-16, 10:45 pm)
பார்வை : 163

மேலே