உண்மையில் சுதந்திரம் பெற்றோமா

சுதந்திரம் பெற்றதாம் எம் நாடு
வன்முறையில் இன்னும் அது ஓர் காடு!

பெண்ணினமாய் நீ இருந்தால்
நள்ளிரவில் நகை அணிந்து
தனிமையிலே நடை கொண்டு
நெடுஞ்சாலையில் நீயும் வர சம்மதமா?
வெண்ணிலவும் விலகி ஒதுங்கி
கள்வனுக்காய் வழி அமைக்கும் காலம் இது அன்றோ!

நள்ளிரவு வேண்டாமே நண்பகலில் கூட
எம்சிலரின் வன்முறைக்கு எல்லை உண்டா?
அணிகலங்கள் மட்டும் அல்ல மங்கையரின் கர்ப்பையும் கொடியவர்கள் வேட்டையாடும் சூழ்நிலையில்
சுதந்திரமாய் சுற்றி திரிய
பெண்களுக்கும் வழி உண்டா?

ஆங்கிலேயரை விரட்டிவிட்டோம்
அடிமைத்தனம் நீக்கிவிட்டோம்
வரலாறு மட்டும் கூறும் இக் கதை
வருங்கால விழுதுகளோ
அன்றொயிட்டின் அடிமைகளாகிய நிலை!

எங்கே நாம் பெற்ற சுதந்திரம்?
எல்லாம் வெறும் வாய் மந்திரம்!

இலத்திரனியலால் இயங்கும் நம் இளைஞர்கள்
இதயத்தால் இயங்கும் காலம் எதுவோ
நம்பிக்கையாய் பணம் இருந்தவர்களுக்கு எல்லாம்
தும்பிக்கையாய் நல்ல குணம்
சேரும் காலம் எதுவோ
அன்று பெறுவோம் மெய் சுதந்திரம்..!!

எழுதியவர் : சலோ (6-Sep-16, 12:18 am)
பார்வை : 159

மேலே