அழகான ராட்சசி ---காட்டேரியின் காதல்

(கற்பனை கவிதை - காட்டேரி இனத்தின் காதல்)
உன் அழகை நான் எப்படி வார்ணிப்பேன்
என் காட்டேரியே...!
என் அழகான ராட்சசியே....!
நீயோ...
இருளில் இருளாய் உள்ளாய்
நிலவில் அம்மாவாசையாய் இருக்கிறாய்...!
மண்டை ஓட்டை கொண்டு
மண்டையை அலங்காரம் செய்தவளே...
நித்தமும் ரத்தம் குடித்து
ரத்தம் பூசி
ராத்திரியில் திரிபவளே.....
என் காட்டேரியே,
இந்த இருளில் உன்னை பார்ப்பதே கடினம்
இதில் உன் கண்கள் காண தேடுதே என் வதனம்..!
என் அம்மாவாசையே
என் அம்மாவின் ஆசையே...
ஒரு முறை பார்ப்பாய
உன் ரத்தத்தில்
என் ரத்தத்தை கலப்பாய....
-ஜ.கு.பாலாஜி.