நாட்டுக்கு ஏற்ற படிப்பே நாளைக்கு ஏற்றம் தரும்
அறிந்தே படிங்கள்
பணம் மோதி திறமை நொறுங்கி
வானம் எங்கும் பரவி கிடக்கிது பட்டம்
பார்த்தே பாதம் படட்டும்
வேலை கடல் தாண்டுமோ என்று
தேங்கி கிடக்கும் பட்டம் பட்ட மேக மூட்டங்களில் இருந்து
விலகியே நடங்கள்
நாட்டுச் சொந்தம் அழிந்திடுமோ என்று
விற்றுச் சென்ற காணி துண்டுகளால் பெற்ற காகித துண்டில் இருந்து
திரும்பியே செல்லுங்கள்
திருப்பிச் செலுத்த முடியுமோ என்று
கடன் தந்த கார்துன்பத்திலும் இழந்த இளமைப் பருவத்திலும் இருந்து
தப்பியே ஓடுங்கள்
சுமக்கவும் சுமத்தவும் முடியுமோ என்று
திறமைக்கு வேலி இட்டு பெற்ற பெருமை
பெயரில் இருந்து
ஏற்றுக்கொள்ளுங்கள்
இலவச படிப்பு இழிவாகாது என்று
திறமையை தீட்டி பொறாமையை பூட்டி ஆளுமையை நீட்டி நாட்டிலே உன்னை நாட்டி கொள்வதில் இருந்து
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
