எதிர் கால கனவு

கனவு நல்லது..
எதிர்காலத்தை தெளிவாய் காட்டும்
கனவு நல்லது..
அதற்கான முயற்சிகளில்
அனுதினமும் ஈடுபட்டால்..
அதற்கான செயல்களினால்
வாழ்க்கையையே மாற்றிப்போட்டால்..
நிச்சயம் அந்த கனவு பலிக்கும்..
கனவோ மிகப் பெரிது..
அதனை செயலாக்க எடுத்துக்கொண்ட
முயற்சிகளோ மிகச்சிறிது எனின்
கண்ட கனவால் பயனில்லை..
நிச்சயம் அந்த கனவு வலிக்கும்..
எதிர்காலம் ஒரு காலியான கண்ணாடிக் குப்பி..
அதில் பலரசத்தை நிரப்புவதும்
உதவாத திரவங்களை நிரப்புவதும்
நம் கையில் உள்ளது
எதிர்காலம் ஒரு பெருத்த கருத்த மலை..
அதை நல்ல உளியெனும் செயல் கொண்டு செதுக்கினால்
அழகான சிற்பம் கிடைக்கும்..
சீராகவின்றி சிதையவிட்டோமெனில்
சிதறிய சில கற்களே கிடைக்கும்..
காணும் கனவுகள் முக்கியமல்ல..
அதை செயல்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளே முக்கியம்..
வாழ்க்கை இனிக்க கனவு கண்டு முயற்சி எடுப்போம்
எடுத்த சபதம் அனைத்தும் இனிதே முடிப்போம்....