குடிசை

மழை நாளில்
வீட்டில்
தரைக்குளம் அமர்ந்த
மிச்சமே எங்கள்
தாய்க்குலம் அமர..
மரக்கூடு சலித்த
குருவிகளின் கூடாரம்
கூரைகள்
பஞ்ச பூதங்களிடம்
கடன் பெற்ற
கடன்காரன்
குடிசை
வானம் பூமியின்
கூரை
அதில் யார்
துளையிட்டு நிலவென்பது?
காற்றடித்தால்
கல் வீடு தாங்கும்
செல் வீடு தாங்குமா?