ஆமாங்க நான் மூல நட்சத்திரம் தான்

மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில்
தேர்வில்லாமல் தோற்று போகின்றனர் மூல நட்சத்திர பெண்கள் ....
கம்பீரம் குறையாத கட்டுக்காளைகளே இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
முற்றத்தில் இருக்கும் பல்லியின் சகுனங்களை நம்புவீர்கள்???
மனதளவில் சரிபட்டு விட்டு
வார்த்தை அளவில் வஞ்சனை இல்லாமல் ,,,,
நட்சத்திரத்தை கேட்டதும் யோசித்து சொல்கிறோம் என்று பிடி போடும் உங்களுக்கு
வீட்டில் எங்கோ ஓரு மூளையில் யாருக்கும் தெரியாமல் அழும் அப்பெண்ணின் தாயாரின் கண்ணீர் தெரியுமா????
கடன் வாங்கியாவது திருமணம் நடத்திட வேண்டும் என்று கனவு கோட்டை கட்டுகிற தந்தைகளின் மனக்குமுறல் தான் புரியுமா????
அப்படியே அப்பெண்ணிற்கு நீங்கள் வாழ்கை கொடுத்தாலும் வரதட்சனை என்ற முறையில் நட்சத்திரத்தை காரணம் காட்டி கொள்ளை அடிக்கும் கும்பல் போல வேடம் இடும் ஆடவா ,,,
கொஞ்சம் கேள் !!!
நீங்கள் நிராகரித்ததும் ஐன்னல் கம்பிகளை எண்ணும் மங்கைகள் நாங்கள் அல்ல ,,
இரயில் சத்தத்தில் இராணுவ உடையுடன் மாமன் வருவான் என்று காத்திருக்கும் பாரதிராஜா பட நடிகைகளும் நாங்கள் அல்ல ,,,
போட்டி என்று வந்தாகிட்ட பின்னர்
நீயா ??? நானா ??? என்று பார்பது தானே சரி !!!!!
கரண்டி எடுக்கும் கையில் பேனாவும் பிடிப்போம்
மூல நட்சத்திரமா என்று நீங்கள் யோசிக்கும் முன் உங்களை நாங்கள் நிராகரித்து விடுவோம்,...
வாழும் நம்பிக்கையுடனும் கனவுகளுடனும் வா வாழ்ந்து காட்டலாம் ...
இப்படிக்கு இவள்
மூல நட்சத்திர பெண்!!!!!!