வாழ்க்கையே ஒரு விளையாட்டு தானே

பல்லாங்குழி விளையாட்டு தானே வாழ்க்கை,
இருக்கும் இடத்தில் எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கச்சொல்லும்,

பரமபதம் விளையாட்டு தானே வாழ்க்கை,
ஏற்றம் இறக்கம் இரண்டும் இருக்கும் என்பதை உணரச்செய்யும்,

கில்லி விளையாட்டு தானே வாழ்க்கை,
கூட்டல் பெருக்கல் கணக்கை கற்பனை செய்யச்சொல்லும்.

தாயம் விளையாட்டு தானே வாழ்க்கை,
வெட்டி வெளியே தள்ளினால் மீண்டும் முயன்று தொடங்க முன்னேற.

சதுரங்க விளையாட்டு தானே வாழ்க்கை,
இதரவழி இல்லாத போதும் இறுதி வரை போராடும் உறுதிமனம் பெற

நொண்டி விளையாட்டு தானே வாழ்க்கை,
சமமாக இல்லாத போழ்தும் சாதிக்கத்தூண்டும் சக்தியைப்பெற

கண்ணாமூச்சி விளையாட்டு தானே வாழ்க்கை,
ஒளிந்து இருப்பவரை கண்டுபிடிக்க பொறுமையும்
தானே ஒளிந்து மகிழ்ந்து திருஷ்டி படாமல் பெருமை பெற.

இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணும்மான்னு
நிறைவை தெளியவைக்கும் வாழ்க்கையை
வாழலாம் வாருங்கள் தோழர்களே.!

எழுதியவர் : செல்வமணி (7-Sep-16, 11:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 296

மேலே