இருவிதழ் இணைந்திடும் தருணம்
மாலைப்பொழுதின் நேரம்
அடி! மலையடிவாரம்
மழை பொழுந்திடும் நேரம்!
ஈரத்துளி வந்து,
உந்தன் இதழில் தேங்குதே!
கை தூரிகையாலே!
கொஞ்சம் துரத்திடும் போது,
சின்னஞ்சிறு சிணுங்கல்
தோன்றி மறையுதே!
அந்த நேரத்தில் நீயும்
கொஞ்சம் வெட்கம் கொண்டாய்!
உன் மயிலிறகால்
முகம் புதைத்து சென்றாயே!
எந்தன் கண் இமையால்
உன்னை வருடி கொண்டேன்!
அட, கண் திறந்து
என்னை சிறைபிடித்து
சென்றாளே!
கை ரெண்டும்
பிண்ணிடும் நேரம் !
இருவிதழ்,
இணைந்திடும் தருணம்!
காற்று தடைபட்டாலும்,
விடுபட விரும்பாதே!
என் திமிரே! என் உயிரே!
உன்னை பார்த்து! பார்த்து!
என் முகமும் மலர்ந்து
சிறுசிறு பூக்கள், பூத்து
குலுங்குதடி!
கண்ணிலே காதலும்!
நெஞ்சிலே ஆசையும்!
என்னை தான் கொல்லுதே!
தேகத்தை தீண்டிட,
தேவையை தீர்த்திட
நானும் கொஞ்சம் விழைகிறேனடி!
இத்தனை தெரிந்தபின்
இன்னும் மவுனகள் ஏனடி?!
கள்ளி! உன் சிரிப்பிலே!
கைவிரல் துடிக்குதே!
பௌர்ணமி நிலவை,
பாய்ந்து பிடிக்கையில்!
உன் கைகள் வந்து
குறுக்கே மறைக்குதே!
தடைகளை விலக்கிடு!
முத்தங்கள் தந்திடு!
மடியில் எனை கிடத்த
கதை நூறு சொல்லிடு!
அருகில் நீரும் இல்லை!
கொஞ்சம் வேண்டும் தொல்லை!
உன் தாகம் தீர்க்க,
உன் செவ்விதழை
என் இதழோடு
பொறுத்தி பார்த்திடு!