பெற்றோருக்காக

நீங்கள் குழந்தையாக இருந்தபோது எவ்வளவு குறும்பு செய்திருப்பீர்கள்
நீங்கள் பள்ளி செல்லும்போது
எவ்வளவு அடம் செய்திருப்பீர்கள்
நீங்கள் கல்லூரி போகும்போது எவ்வளவு ரகளை செய்திருப்பீர்கள்
நீங்கள் வேலைக்கு போகும்போது எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள்
நீங்கள் கல்யாணம் ஆகும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள்
நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது
எவ்வளவு நெகழ்ச்சியாக இருந்திருப்பீர்கள்

இதற்கு பணயமாக எதை
ஈடு செய்ய முடியும்

நீங்கள் குழந்தையாக இருந்ததுமுதல்
உங்களுக்கான ஊதியம் வரும்வரை
எவ்வளவோ செலவு செய்திருப்பார்கள்
என்றேனும் கணக்கு சொல்லிருப்பார்களா???


அவர்கள் குழந்தை முதல்
உங்கள் குழந்தை வரை

இவ்வளவு காலமும் உங்களுக்காகவே
உழைத்து களைத்தவர்களுக்கு
உங்களால் அவர்களுடைய
கடைசி காலத்தைகூட
நிம்மதியாக கழிக்க உதவமுடியாதா?????

எழுதியவர் : சுமதி பழனிசாமி (9-Sep-16, 9:07 am)
Tanglish : petrorukkaga
பார்வை : 74

மேலே