பொன்னித்தாயே நீ வாராயோ

குடகினிலே
நீ பிறந்தது தான் குற்றமன்றே

கார் மிகு நாட்டினிலே
நீ வளர்ந்ததும் தான் குற்றமன்றே

தொல்காப்பிய நாட்டினிலே
நீ புகுந்ததும் தான் குற்றமன்றே

தொல்லைகள் கூடிய
அரசுக்கும் அரசியலுக்கும் இடையே
நீ வந்தது தான் குற்றமே

என் பொன்னித்தாயே
நீ எப்பொழுது அடைவாயோ
விடுதலை தான்

இவ்வுலகின் மாபெரும்
மக்கள் அரசு நாட்டினிலே
தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து
தாலாட்டு பாட்டினை பாடிடவே
வாராயோ எங்கள் பொன்னித்தாயே!!!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (9-Sep-16, 9:34 am)
பார்வை : 112

மேலே