விவசாய சங்கங்களின் போர்வையில் விஷகிருமிகள்

விவசாய சங்கங்களின் போர்வையில் விஷகிருமிகள்

பி.ஆர்.பாண்டியன் [தமிழக விவசாயிகள் சங்கம்]

நீங்கள் சேற்றில் கால் வைத்து விவசாயம் செய்யும் விவசாயியா?

அப்படியென்றால் உங்களுக்கு ஒரு விவசாயியின் கஷ்டம் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவ்வளவு காலம் நீங்கள் தமிழ்நாட்டில் என்ன கிழித்துக்கொண்டு இருந்தீர்கள்? கடந்த நூறு வருடத்தில், கர்நாடகா காவேரியை சுற்றி நானூறு மிகப்பெரிய குளங்கள்,ஏரிகளை உருவாக்கி, அதில் காவேரியில் வரும் தண்ணீர் சேகரிக்கிறார்கள்.

நீங்க என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? ஆற்றுக்கரையோரம் நாகரிகம் வளர்ந்ததாக நான் படித்து இருக்கிறேன்.ஆனால் இன்று நதிகரையோரம் எப்படி இருக்கிறது?

ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கருப்பையை எடுத்துவிட்டு, அந்த பெண்ணை வம்சம்(குழந்தை பெற) வளர் என்று சொன்னால், அவளால் எப்படி வம்சம் வளர்க்க முடியும்? அது போல ஒரு பெண்ணின் கருப்பை மாதிரி ஆற்றுக்கு மணல். நம் வம்சம் வளர்க்க, அந்த மணலை கொள்ளையடிக்குறாங்களே அதை பற்றி என்றாவது கேள்வி எழுப்பியது உண்டா?

என் தாத்தன் ஆற்றில் குளித்தான்.
என் அப்பன் குளத்தில் குளித்தான்.
நான் குழாய் தண்ணீரில் குளிக்கிறேன்.
நாளை என் சந்ததி குளிக்கவே குளிக்காது.

இப்படி தான் இன்றைய நிலை போய்க்கொண்டு இருக்கிறது? ஏர் பிடித்த விவசாயி நீ இதை பற்றி என்றாவது ஒரு போராட்டம் செய்து இருக்குறீயா? போராட்டம் செய்தால் திராவிட கட்சிகளிடம் உதை வாங்க வேண்டும். ஏன் என்றால் பல கோடி கொள்ளையடிக்கும் தொழில் மணல் கொள்ளை.

ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி கல்லணையை காட்டினார் கரிக்காலச்சோழன். 1895 ஆண்டு முல்லை பெரியாறு அணையை காட்டினார் பென்னி குக். அதற்கு பிறகு 1934 ஆண்டு மேட்டூர் ஆணை கட்டப்பட்டது. அதற்கு பிறகு ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கிற கட்சி என்ன செய்தாங்க? இல்லை கட்டுவதற்கு இடம் இல்லையா? இதை பற்றி எல்லாம் என்றாவது சிந்தித்தது உண்டா? இல்லை தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற விவசாய சங்கங்களாவது அரசை எதிர்த்து போராட்டம் செய்து இருக்கிறீங்களா?

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவரும் நேர்மையாக இருந்தார்.விவசாயத்திற்காக போராடினார்.திருச்சி மாநாட்டில் எம் ஜி ஆர் ஆட்சியில் உட்ட உதையில் பச்சை துண்டை கோவணமாக கட்டிக்கொண்டு ஓடி ஒளிந்தார்களே, அதை பிறகு எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து போராட்டம் செய்தீர்களா? அதன் பிறகு நீங்கள் எல்லாம் ஆளும் கட்சிகளுக்கு அல்லக்கையாக ஆகிவிட்டீர்கள். விவசாய சங்கம் என்று வைத்து கொண்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொட்டியை வாங்கி கொண்டு வாயை பொத்திக்கொண்டு இருக்குறீங்க.

இவ்ளோ அழுக்கை உன் முதுகில் வைத்து கொண்டு நீ வார்த்தைக்கு வார்த்தை மோடி தமிழகத்துக்கு துரோகம் செய்தார், தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டார் னு சொல்கிறாய். இவ்ளோ அழுக்கை வைத்து கொண்டு நீதான் தமிழக விவசாயிகளின் துரோகி.

தமிழ் நாட்டில் எந்த ஆறும் சுத்தம் செய்ய படவில்லை, எந்த வாய்க்கால்களும் புனரமைக்கப்படவில்லை. 1962 பிறகு எந்த வாய்க்கால்களும் தடுப்பணை கட்டப்படவில்லை. பழைய நீர்ப்பாசன, பாதுகாப்பு வழிகள் சரியாக பாதுகாக்க படவில்லை, அணை கட்டபடவில்லை. ஆற்றில் மணல் எடுக்காமல் தடுத்தாலே பாதி விவசாயத்தை காப்பாற்றி விடலாம். தமிழ் நாட்டின் நதிகளை இணைத்தால் 75% விவசாயத்தை காப்பாற்றி விடலாம். ஆயிரம் அணைகள் கட்டினால் 100% விவசாயத்தை காப்பாற்றிடலாம். மழை கால நீரை வைத்து விவசாயத்தை காத்திடலாம்.

தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பில் இருந்து பழைய நிலைக்கு கொண்டு வந்தாலே தண்ணீரில் தன்னிறைவு அடைந்து விடலாம்.


"உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி"

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி"

என்று, காவிரியின் வெள்ளம் பாயும் மகிழ்ச்சியை சிலப்பதிகாரம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

காவேரி நமக்கு சொந்தம் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

நூற்றிப்பதினான்கு வருடமாக தண்ணீர் கேட்டு போராடுகிறோம். கடந்த இருபத்தியேழு வருடமாக காவேரி நடுவர் மன்றம் சொல்லி கேட்கவில்லை. பதினேழு வருடமாக உச்ச நீதி மன்றம் சொல்லியும், வாஜ்பாய் நேரடியாக பேசியும், அவர் அமைத்த நடுவர் மன்ற குழு ஆய்வு செய்தும் கேட்காத கர்நாடகா, மோடி சொன்னதும் உடனே திறந்து விட போறாங்களா? நீ எந்த கட்சி கிட்ட பொட்டி வாங்கி கொண்டு மோடி தான் காரணம், மோடி தான் காரணம் னு கூப்பாடு போடுறீயே? நீ உண்மையான விவசாயி தானா?

உண்மையான விவசாயி யார் என்றால் மண்ணை நேசிக்கணும், மழை நேசிக்கணும், இயற்கையை நேசிக்கணும். முக்கியமாக நீரை நேசிக்கணும். அந்த நீரை சேமிக்கணும். இதை எல்லாம் நேசிக்குறவனாக இருந்தால், இந்த திராவிட கட்சிகளுக்கு வால் பிடிக்க மாட்டார்கள், வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

இப்படிக்கு

வைஷ்ணவதேவி
விவசாயத்தை நேசிப்பவள்


  • எழுதியவர் : வைஷ்ணவதேவி
  • நாள் : 9-Sep-16, 9:30 pm
  • சேர்த்தது : vaishu
  • பார்வை : 345
Close (X)

0 (0)
  

மேலே