ரெண்டும் கெட்டானாய்

பூக்கள் அழகு தான்,
பூப்போல இருந்தால் வாசம் தான்.
வாழ்க்கை அப்படியிருக்க
வாய்ப்பேயில்லையே!

வாங்க போங்க என்பதெல்லாம்
வாடிக்கையானால் வாஸ்தவம் தான்,
வா போ என்பதில் அர்த்தம் மட்டுமே பார்க்கலாம்,
அனர்த்தமாய் எடுத்துக்கொண்டால் இங்கு ஆச்சர்யமில்லை!

வட்டார வழக்கு மட்டுமே இங்கு பிரச்சினையில்லை,
வாடிப்போன நேரத்தில் சிலர் வாயில் வருவது பழகினால் தான் புரியும்.
வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவது சிலருக்கு வாடிக்கையாகிப்போனது,
அந்த சிலரை எதிர்பாராமல் போனால் எல்லோர்க்கும் இடைஞ்சல் தான்.

இப்படித்தான் நான் கோபம் வருகையில் திட்டித்தீர்த்தேன்
அருகில் இருந்த நண்பன் சிரித்தான்;
"இப்படியெல்லாம் திட்டுவது பொருத்தமாக இல்லை.
திட்டுவதற்கு ஒரு ஆக்ரோஷம் வேண்டும் அள்ளி வீச வேண்டும்" என்றான்.

"எப்படி" என்று நான் கேட்டேன்,
திட்டி தீர்த்தான் அவன் சாம்பிளுக்காக,
காதுகளை மூடிக்கொண்டேன், குமட்டல் வந்ததால்.
"இவ்வளவு மோசமாக திட்டத்தான் வேண்டுமா?"

"உரைக்கனும்னா திட்டத்தான் வேணும்
உள்காயம் மனசுக்குள்ள ஆகணும்
அப்படித்திட்டணும்" என்று பணித்தான்
பாடம் கற்றேன், இது கூட ஒரு வகை சாமர்த்தியமாம்.!

மனிதரெல்லாம் இங்கு ரெண்டு வகை;
ஒரு பக்கம் நல்லவர்கள், அப்பழுக்கற்றவர்கள்
இன்னொரு பக்கம் அப்படியில்லை, ரெண்டும் கெட்டானாய்..!

எழுதியவர் : செல்வமணி (10-Sep-16, 8:02 pm)
பார்வை : 134

மேலே