உயிர் எழுந்து வா
உயிர் எழுந்து வா...
சிலந்தியும்
சிறை பிடிக்கும்
நீ முடங்கி கிடக்கையில்....
எரிமலையும்
வழிவிடும்
நீ எழுந்து நடக்கையில்.....
சூரியனும் மறையலாம்
நிலவும் தேயலாம்
தன்னமிக்கை இருக்க
பயம் ஏன்?
முடிவிலிக்கும்
முடிவு உண்டு
என்பதை காட்டுவோம்
உயிர் எழுந்து வா...
அன்புள்ள உயிருக்கு
அரனாய் மாற
உயிர் எழுந்து வா...
ஊனமுள்ள மனத்துக்கு
உயிர் கொடுக்க
உயிர் எழுந்து வா...
மரண தேவன் துணை இருக்க
மரண பயம் தேவையில்லை
மரணத்தையும் மரணிப்போம்
உயிர் எழுந்து வா...
மரமும் விழுகிறது
விழுந்த விதையும் எழுகிறது
மனம் மட்டும் ஏன் அழுகிறது...?
உயிர் எழுந்து வா...
-ஜ.கு.பாலாஜி -