ஏனடி உன் நினைவுகளால் கல் எறிகிறாய்.....................
உன்னோடு கரம் பிடித்து நடக்க
வேண்டும்
உன் மார்போடு சாய
வேண்டும்
தாயிடமே இருக்க
விரும்பும் குழந்தையை போல
நான் உன்னுடனேயே
இருக்க வேண்டும்
உன் முந்தானையிலே
தாலாட்ட வேண்டும்
உன் பொன் சிரிப்பிலே
என் கவலைகள் மறக்க வேண்டும்
உன்னுடனேயே வாழ வேண்டும்
என்று நான் நினைத்த
ஒவ்வொன்றும்
வெறும் கனவாய்
கற்பனையாய்
கலைந்து போனதடி
என் இதய துடிப்பில்
உன்னிடம்
சொல்லாத என் காதலை
சொல்லிவிடு
சொல்லிவிடு
என்று கேட்க்குதடி
ஆனால் உன்னிடம்
சொல்லாமலேயே
என் உதடுகள்
ஊமையாய்
போனதடி
கள்ளமில்லா
உள்ளமடி என் உள்ளம்
அதில் ஏனடி உன் நினைவுகளால்
கல் எறிகிறாய்
நித்தமும் வலியால்
துடிக்கிறேனடி
ஆனாலும்
உன்னையே
நினைக்கிறேன்
நானடி............
இப்படிக்கு........................உன்னவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
