பூவை

பூ வைத்தத் தலையின்
மத்தியில் அவள் எடுத்த
நேர் வகிடுதான்
எனக்கு பூ மத்திய ரேகை

அவள் பூமுகம் காணும்
ஆண்களுக்கு குணமாகின்றது
நீண்டநாள் தீராத சோகை

அவள் குழலில்
பூ வீற்றிருக்கும் கோலம்தான்
எனக்கு பூகோளம்

அவள் குழலில்
பூ வீற்றிருக்கும் காலம்தான்
என் வாழ்வின் பூபாளம்

இந்தப் பூவையைப்
பார்ப்பதனால் உயிர்
ஊசலாடும் ஆண்கள் கூட
தள்ளிப்போடலாம் அவர்களது சாவை

இந்த பூமி சுற்றுவதற்கு
இந்தப் பாவை பூவை
அவசியம் தேவை

எழுதியவர் : குமார் (12-Sep-16, 9:56 am)
பார்வை : 895

மேலே