அவளின் வளையல்
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணின் வளையல்
காதல்கொண்டு கவிபடித்தால்
என்னை வளைத்தபோது
வலித்த என் சிரம்
தன்னை மறந்து களித்தது
நுழைந்தபோது உன் கரம்
அன்றுதான் உணர்ந்தேன்
என் பொன் உடலைவிட
உலகில் மின்னுவது
இந்தப் பெண் உடலென்று
வளைந்த என்னால்
இவளை வளைக்க முடியுமோ ?
நானோ வளையல்
நன்றாக மாட்டிக்கொண்டேன்
கரம் எனும் காதல் வலையில்
அவளின் கரம் அச்சாணிக்கரம்
நான் அதன் சக்கரம்
அவள் என்னைக் கழற்றி
வைக்கும்போதெல்லாம்
என் மனம் உழன்றது
என் வனம் கழன்றது
அவள் கைக்குள் நுழைத்தபோது
அவளுக்கு வலித்ததோ இல்லையோ
எனக்கு வலித்தது