பருவம்

பறந்திடத் தோன்றும் வயது
அறிவுரை ஏற்கா மனது
பிடித்திடத் தோன்றும் விண்மீன்
அறுவைகள் சகிக்கா உள்ளம்

குழப்பங்கள் ஏதும் இலாது
சிரித்திட மட்டும் பிடிக்கும்
ஆடிடத் தோன்றும் கால்கள்
லட்சியம் தாண்ட நினைக்கும்

படபட வென்னும் எண்ணம்
பட்டாம்பூச்சி போன்ற வண்ணம்
மனதிற்குள் நீச்சல் அடிக்கும்
கேலி பேசினாலே வெடிக்கும்

வருங்காலம் வாய்பிளந்து நிற்கும்
நிகழ்காலம் நித்திரை கொடுக்கும்
கடந்தகாலம் நெஞ்சுக்குள் இனிக்கும்
நொடிகளோ விரைந்து மடியும்

பருவம் கலைந்து போகும்
உருவம் உடனே மாறும்
திரும்பக் கிடைக்கா பகுதி
நமக்கு கிடைத்த வெகுமதி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Sep-16, 10:04 pm)
Tanglish : paruvam
பார்வை : 376

மேலே