போருக்குப்பின்

போருக்குப்பின்

கையேந்தி நிற்கும் பச்சிளங்கள்
நிற்க வைத்ததிந்த‌ உலக அவலங்கள்
உணவு இடும்முன்
உங்கள் உள்ளத்தை வினவுங்கள்
வாழ்க்கை வாழ வந்தோருக்கு
இதுதான் உங்கள் பரிசா?
சிரித்து வாழ வந்தோருக்கு
கண்ணீர் மட்டுமே உறவா?
நேசத்தில் குளிக்க வந்தோரை
உதிரத்தில் குளிக்க வைத்தது என்ன நியாயம்?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Sep-16, 10:00 pm)
பார்வை : 49

மேலே