தமிழர்களின் எச்சரிக்கை 12092016

எரிந்துவிட்டது
மனிதநேயம்
சாம்பலாய்
உதிர்ந்துவிட்டது
இந்தியத் தாயே
தன் தமிழ்நாட்டு பிள்ளையை
மறந்துவிட்டது
புரிந்துவிட்டது
தெளிவாய் உண்மை
உணர்ந்துவிட்டது
அரசியல் நாடகத்தில்
தமிழ்நாட்டை
பலி ஆடாய்
கொடுத்துவிட்டது
நதி நீர் கேட்டதற்கா
கர்நாடகம்
எங்கள்
உயிர் நீர் கேட்கிறது
அதை
மதி இல்லா
மத்திய அரசு
வேடிக்கை பார்க்கிறது
இருப்பினும் தமிழா
நாம் பொறுமைக்கொள்வோம்
மீண்டும் நம்மீது
தாக்குதல்கள் தொடர்ந்தால்
நாம்
யார் என்று சொல்வோம்
இனியாவது தமிழா
நாம்
ஒற்றுமைக்கொள்வோம்
நம்
தமிழர்களின்
உரிமையும்
உடைமையும்
உயிரையும்
பாதுகாத்து வெல்வோம் !

எழுதியவர் : சூரியன்வேதா (12-Sep-16, 8:41 pm)
பார்வை : 97

மேலே