என் ஓட்டம் என் இலக்கு

நாளும் காண பல நாட்டம்
நன்றாக ஓடுது என் ஓட்டம்
நாளோடு மாறுது அதன் திட்டம்

பகலிலும் என்கையில் விளக்கு
பட்டும் படாது என் இலக்கு
பாட்டில் வராத ஒரு கணக்கு

ஆசைகள் ஆடுது அன்றாடம்
அறிஞ்ச பின்னும் என் ஓட்டம்
முடிச்சூட்டும் நல்ல மகுடம்

காலத்தோடு மாறும் நோக்கு
கணக்கில் கொள்ளும் என் இலக்கு
சிந்தையில் உண்டு கொஞ்சம் செருக்கு

வஞ்சனை யில்லாமல் வரும் வாட்டம்
வந்தாலும் நிற்காது என் ஓட்டம்
வாசனை வீசும் நல்ல பூந்தோட்டம்

பின்னிப் பிணைந்த பிணக்கு
பின்னால் செல்லா என் இலக்கு
மாறாது மணக்கும் அதன் வாக்கு

வாழ்க்கையே ஒரு பெரிய வட்டம்
வாழத்தான் ஓடுது என் ஓட்டம்
வலிமை நிறைந்த அதன் திட்டம்

இருப்புக் கொள்ள வேண்டும் வழக்கு
இன்னா செய்யாது என் இலக்கு
இனிதே வாழ்வை நன்கு இயக்கு

- செல்வா

பி.கு: கவிதைமணியில் வெளி வந்துள்ளது

எழுதியவர் : செல்வா (13-Sep-16, 6:17 am)
Tanglish : en oottam en ilakku
பார்வை : 128

மேலே