என் உயிரே

மழையின் சாரலாய்...
பூவின் வாசமாய்...
என் மடி மீது தவழா
என் உயிரே......!

சூரியனின் வெம்மையாய்...
சந்திரனின் குளுமையாய்...
என் கைகளில் புரளா
என் கவியே...!

வானவில்லின் அழகாய்...
பாலின் வெண்மையாய்....
என் நெஞ்சத்தில் தூங்கா
என் அழகே....!

மலர்ந்திருக்கும் பூவாய்....
சலங்கையின் ஒலியாய்...
என் முகம் பார்த்து சிரிக்கா
என் அமுதே....!

தந்தையின் அறிவாய்....
தாயின் அழகாய்...
என் உயிரினுள் தோன்றா
என் அணுவே....!

செவிக்கு தேனாய்.....
மனதிற்கு மகிழ்வாய்...
' அம்மா ' என்றழைக்கா
என் கனியே....!

உன் வருகைக்காக காத்திருந்து
என் கண்களும் சோர்ந்து
' மலடி ' என்ற பட்டமும் கிடைத்ததே
என் உறவே....!

அதை மாற்றவும் வருவாயோ...?
' அன்னை ' என்ற ஸ்தானமும்
தருவாயோ....
என் உயிரே...!

எழுதியவர் : நித்யஸ்ரீ (12-Sep-16, 11:31 pm)
Tanglish : en uyire
பார்வை : 119

மேலே