டேய் சணலு

டேய் சணலு, எங்கடா போயிட்ட?
@@@@
இதோ வந்துட்டேன் பாட்டிம்மா. பக்கத்திலே இருக்கற கடையிலே சாக்லட் வாங்கப் போயிருந்தேன். பாட்டி எம் பேரு சணல் குமார். நான் அம்மா அப்பாகூட வாழ்ந்திட்டு இருக்கறது உத்தர பிரதேசத்தில உள்ள நகரத்தில. எம் பேரு இந்திப் பேரு. உங்களால எம் பேரச் சரியா உச்சரிக்க முடியாது. நீங்க சணலுன்னே கூப்புடுங்க. நாங் கோவிச்சுக்கமாட்டேன். நா பள்ளிக்கூடத்தில இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் எல்லாம் படிக்கறென்.வீட்டில அம்மா எனக்குத் தமிழ் சொல்லித் தர்றாங்க. எனக்கு தமிழ்ல எழுதவும் பேசவும் தெரியும்.
வீட்டில சினிமா (திரைத்) தமிழைப் பேச்க் கூடாதுன்னு அம்மாவும் அப்பாவும் சொல்லிட்டாங்க.
#@@@@@@
அப்பறம் ஏன்டா சணலு உனக்கு இந்திப் பேர வச்சிருக்காங்க?
#@@@@@

பள்ளிக்கூடத்திலதான் எம் பேரு சணல் குமார். வீட்டில என்னத் தமிழழகன்-ன்னுதாங் கூப்பிடுவாங்க.
அந்தப் பேர இந்திக்காரங்களால சரியா உச்சரிக்க முடியாது. எம் பேர அவுங்க தப்புத் தப்ப உச்சரிச்சு தமிழைக் கேவலப்படுத்திருவாங்கன்னுதான் பள்ளிக்கூடத்திலேயும் வீட்டுக்கு வெளிலயும் இந்திப் பேரு.
#######
ஏன்டா சணலுத் தங்கம், உனக்கு இந்தி பேசத் தெரியமா?

@@##@@@
ஓ...நா அங்கயே பொறந்து வளந்தன் இல்லையா இந்திக்காரங்க மாதிரியே இந்தி பேசுவேன். தமிழ் நாட்டுல பாருங்க யாருக்குமே தமிழ்ப் பற்று கெடையாது. இனப் பற்றுங் கெடையாது. அதானலதான் வேற மாநிலத்துக்காரங்க தமிழர்களக் கேவலமா நெனைக்கிறாங்க. இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வச்சாலும் தமிழங்க தமிழங்கதான். பேர வச்சு மரியாதையைத் தேடிக்க முடியாது. நம்ம தாய் மொழிய நாமே கேவலப்படுத்தறதாலதான் மத்தவங்க நம்ம கேவலமா நெனைக்கறாங்க. கன்னடடக்காரங்க பண்ணற அட்டூழியத்தை தொலைக் காட்சி செய்தில பாத்தீங்கதானே. இவ்வளவு நடந்ததுக்கப்பறந்தான் சில அமைப்புகள் கண்டனப் போராட்டம் நடத்தறாங்க. பெரிய அரசியல் கட்சிங்கள்ல ஒரு சில கட்சிங்கதான் அறிக்கை வெளியிடறாங்க. நாம கன்னடக்காரங்க மாதிரி வன்முறையக் கையில எடுக்கக் கூடாது. அறவழிலே நம்ம எதிர்ப்ப உலகறியச் செஞ்சிருக்கலாமே.
@#####
நீ சொல்லறது நூத்துக்கு நூறு சரிதாண்டா சணலு. தாய்மொழி மேல பற்று இல்லாதவங்கு தமிழர்கள் மேல பற்று இருக்குமா? இதத் தாங் கலிகாலம்னு சொல்லறாங்க. அந்தக் கைலாசநாதனே வந்தாலும் தமிழருங்கள திருத்த முடியாதுடா சணலு.
@@@#@@@@@@##########ஃ#ஃஃஃ
சணல் குமார் சசிதரன் என்ற பெயரை 'தி இந்து' ஆங்கில நாளிழில் (13/9/16) பார்த்தேன். அவர் மலையாள திரைத் துறையைச் சேர்ந்தவர்.
(சணல் = சுறுசுறுப்பான, உறுதியான.
குமார் = இளவரசன், சின்னப்பையன்).
@@@#############@@@@@@@@
மொழிப் பற்றை வளர்ப்பதே எனது நோக்கம். மொழிப் பற்று இருந்தால் மொழி சார்ந்த இனப் பற்றும் நம்மைப் பற்றும். கன்னடர், தெலுங்கர் மலையாளிகளிடமிருந்து நாம் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். முதலில் தமிழக அரசியல்வாதிகள் மாறி தமிழர் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.

எழுதியவர் : மலர் (14-Sep-16, 12:16 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 232

மேலே