ஆளத் தகுதியற்றவர்கள்

ஆளத் தகுதியற்றவர்கள்
ஆளும்போது
வாழத் தகுதியற்றதாக
மாறிவிடுகிறது
தேசம்.

காங்கிரஸ் கர்நாடகம்
பிஜேபி இந்தியா
நீங்கள் இருவரும்
பேரழிவின் சாட்சிகள்.

மாநிலத்திற்கு மாநிலம்
வேடந்தரிக்கும் நீங்கள்
தேசியக் கட்சிகள் அல்ல.
வேசியக் கட்சிகள்.

தேசத்தை மயானமாக்கிவிட்டு
கூச்சமின்றி நாவசைக்கும்
பாகிஸ்தான் பிரதமர் மோடி உங்களுக்கும்,
ஆப்கானிஸ்தான் முதல்வர் சித்தராமய்யா உங்களுக்கும்
நிச்சயம் பரிந்துரைக்க வேண்டும்
’புனிதர் பட்டம்’ .

காவிரியை ஆறாகப் பார்த்தால்
நீர் ஓடும்.
அரசியலாகப் பார்த்தால்
ரத்தமே ஓடும்.
மக்களின் ரத்தம் மட்டுமல்ல.
உங்களின் ரத்தமும்.

வன்முறை
எய்தும் கொல்லும்
எய்தவனையும் கொல்லும்
அது எப்பொழுது என்பதை
காலமே சொல்லும்.

எழுதியவர் : முகநூலில் ச.மோகன ராசு‎ அரச (14-Sep-16, 3:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 124

மேலே