பாவாடை தாவணி

பாரம்பரிய உடையென்று
பாட்டியவள் தந்தது
பார்ப்பவரை வணங்கச் செய்யும்
பாவாடை தாவணி இது...

திருவிழாக்காலங்களில்
பாவாடை தாவணியில் வலம் வரும்
குமரிகளை பார்த்தவுடன் பரிசம் போட‌
பட்டினத்தாரும் வருவதுண்டு...


நம் கலாச்சார பண்பாட்டில்
பூப்பெய்து அமர்ந்தவுடன்
அம்மாவின் சேலையே குமரிகளுக்கு
தாவணியாகும் அன்றைய நாட்களில்

பாவாடை தாவணியில்
வஞ்சியவள் நடக்கையில்
வீதியெல்லாம் ஊர்வலம்
விடலைகளின் பார்வையில்...இன்றைய நாட்களில்

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Sep-16, 5:48 pm)
Tanglish : paavaadai thaavani
பார்வை : 120

சிறந்த கவிதைகள்

மேலே