கல்வியின் தரம் உயர்த்த வழி

அனைத்து மாணவர்களும்
அலைமோதுகிறார்
பொறியியல் நோக்கி!
பல துறைகள்..... இருந்தும்......!
மாறாது ஒரே நாளில்
இந்த சிந்தனை!
ஏனெனில்
தனக்கேற்ற துறையை
ஒவ்வொருவரும் தெரிவு செய்ய
இரண்டு அம்சங்கள் தேவை!
அவையாவன ---
துணிவும் வழிகாட்டப்படுதலும்!
இந்த இரண்டும் இன்மையால்
பெரும்பாலோருடன் இணையும்
பொறியியல் கல்விப் பயணம்!
பயணத்தின் சேரிடத்தில்
எல்லோர்க்கும் இடமில்லை!
பொறியியல் படித்தோர்
அனைவர்க்கும் வேலை இல்லை!

என்ன தீர்வு?
கல்வியின் தரம் உயர்ந்தால்
வேலை வாய்ப்புகள் உயரும்!
பொறியியல் கல்வியின் தரம் உயர.........?

கல்வித் திட்ட மேம்பாட்டை
பொருளாதாரத் திட்டத்தோடு
தொடர்புடையதாக
ஒருங்கிணைத்து அரசு செய்தால்
பொறியாளர்களுக்கான
தேவை அதிகரிக்கும்!
வேலையின்மை பிரச்னை
படிப்படியாய் குறைந்து விடும்!

எழுதியவர் : ம கைலாஸ் (14-Sep-16, 8:14 pm)
பார்வை : 1233

மேலே