இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆயுர்வேத முறைகள்
இன்று முப்பது வயதை தாண்டும் போதே நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வியல் முறையில் ஒன்றிப் போகும் வகையில் உடலில் ஒட்டிக் கொள்ளும் ஒன்றாக இருக்கிறது இரத்த சர்க்கரை பிரச்சனை.
ஆம், முன்னர் பரம்பரை வியாதி என கூறப்பட்டு வந்த நீரிழிவு எல்லா வீட்டிலும் நுழைந்துவிட்டது. இரத்த சர்க்கரையை நமது உணவு பழக்கத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஆனால், இதை எந்த மருத்துவரும் கூறுவது இல்லை.
நாவல் பழம், பாவக்காய், அவரை பிஞ்சு இவைகளை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.
பாலில் மஞ்சள் மற்றும் அம்லா பவுடர் சேர்த்து கலந்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
அத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.
தினமும் ஐந்து ஆவாரம்பூ சாப்பிட்டு வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இரத்த சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், கோவை பழம் சாப்பிட்டு வரலாம். தினமும் ஒரு கோவை பழம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்.
கொன்றை பூவை அரைத்து, மோரில் கலந்து குடித்து வந்தால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த நன்மை அளிக்கும்.