பல விகற்ப இன்னிசை வெண்பா ஒருநாள் பெருமழை பெய்ததும்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
ஒருநாள் பெருமழை பெய்ததும் கண்டோமே
ஏழடி நீரோடை நூறடி சாலையிலே
வாழ்வினில் பேரிடர் சந்தித்த பல்லோரும்
நின்றனர் வீதியி லே
பெருமழை வெள்ளம் வழியெங்கும் ஓடி
சிறிதளவும் எஞ்சாமல் சாகரம் சென்றங்கு
சங்கம மானதும் மங்களம் பாடினோம்
சங்கடம் ஏதுமின் றி
ஆண்டாண்டு இவ்வாறு பேரிடர் நேர்ந்துவிட்டால்
ஆட்சியி லுள்ளவர்கள் வெள்ளத்தில் சிக்கிய
மக்கள் துயர்துடைக்க முன்வந்து நல்கிடுவார்
ஈடாக சொற்பப் பணம்
ஆண்டாண்டு ஆயிர மாயிரம் கோடிகள்
அள்ளிக் கொடுக்கும் பணத்தில் அணைகள்
புதிதாய் அமைத்தால்தான் காவேரி எங்கும்
தவழ்ந்துசெல்வாள் நிம்மதியா க