மழை பெய்யும்

மழை பெய்யும்... !

காவிரி கருவாகி
கர்ப்பப்பை தாண்டி
கரை புரண்டோடி
மதகுக்குப்பின் மறுகும்...!

பின்னொரு நாள்
எல்லை தாண்டி
பீறிட்டுப் பாயும்
மணலாடை கிழிந்த
தன்னுடல் தாண்டியும்...!

கடை மடை தொட்டு
வானம் பார்த்த பூமியில்
வானவில் பூக்க வைத்து
வறண்ட விவசாய உதடுகளில்
புன்னகை தூவிச் செல்லும் ...!

பெரும் நடிகரின்
நெகிழிப் படத்துக்கு பால்...
மட்டை பந்தாட்டனின்
ஆறுக்கு விசில்...
அரை வேக்காட்டு
அரசிய வியாதிகளுக்கு
ஆன்லையினில் குட்டு...
போலிக் சாமியார்களின்
சல்லாப வீடியோ...
சாதித்த தங்க மக்களின்
சாதித் தேடுதல்...
சென்னை விமான நிலைய
கண்ணாடி உடைப்பு
கணக்கெடுப்புக்கள்...
கல்பனா அக்காவின்
சிம்மக் குரல் இசைகள்...
பதினெட்டு பேருக்கு
பதினெட்டு நொடிகளில்
அனுப்பினால் பலன்தரும்
வாட்சப் சாமிகள் என

நாமும் ஓடிக் கொண்டிருப்போம்...

அடுத்த கலவரத்துக்கு
காரணம் தேடி அலைவார்கள்
கரை வெட்டி கம்னாட்டிகள் !

அன்றோரு நாள்...
மிருகங்களால் தாக்கப்பட்ட
மஞ்சமலை தாத்தாக்களின்
மனசு வலிக்கு மருந்தென்ன ?

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (15-Sep-16, 11:09 am)
Tanglish : mazhai peiyum
பார்வை : 169

மேலே