என் உயிரானவளே
தாயின் அன்பு நிலைக்கவில்லை
தந்தையின் அன்பு கிடைக்கவில்லை
நட்பின் அன்பு நீடிக்கவில்லை
பெண்ணே....
உனது அன்பை எதிர் நோக்குகின்றேன்
எனது உயிர் நீங்கும் வரை....
என் உயிரானவளே....
தாயாய் தோழியாய் காதலியாய்
மனைவியாய் எனது குழந்தைக்கு
தாயாய்....
என எல்லாமாய் நீ இருக்க வேண்டும்
இப் புவியில் நான் வாழும் வரை....
அடுத்த பிறவி இருப்பின்
அப்பொழுதும் நான் உன்னையே
வந்தடைய வேண்டும்
ஒரு சேய்யாய்.....
உன் தாய் அன்பு முழுதும்
என்னையே சேர வேண்டும்
உன் உயிர் நீங்கும் வரை.....