அடி என்னவளே

அடி என்னவளே!

என்னவளின் முகம் காண வெண்ணிலவும் மறைந்ததே!
என்னவளின் அழகினிலே விண்ணவரும் வியந்தனரே!
என்னவளின் நடையினிலே அன்னமும் மயங்கியதே!
என்னவளின் விழியினிலே மீனினமும் மூழ்கியதே!
என்னவளின் பேச்சினிலே குயிலினமும் வெக்கி கூவ மறந்ததே!
என்னவளே இத்தனை பேரழகினாய்
என்னுள் நீ எதை கண்டு மயங்கினாய்!
என்னவளே கரடு முரடான அழகில்லா என் தோற்றம் கண்டா!
என்னவளே நான் என்னசெய்வேனடி இந் ஜென்மத்தில் உனக்காக !
என்னவளே இருப்பேனடி உனக்கு அடிமையாக ஈரேழ ஜென்மம் வரை

குமா கருவாடு

எழுதியவர் : குமா கருவாடு (17-Sep-16, 10:01 pm)
சேர்த்தது : கருவாடு
Tanglish : adi ennavale
பார்வை : 277

மேலே