அவன் அவன்அவன்

சூரியனின் வெம்மை அவன்
சந்திரனின் குளுமை அவன்
மலர்ந்திருக்கும் மலரும் அவன்
அம்மலரின் வாசமும் அவன்
மழையும் அவன்
அது தரும் மண் வாசமும்
அவன்.... அவன்... அவன்.....

புல்லின் நுனியில் பனிதுளி அவன்
தேனின் சுவை அவன்
பாலின் வெண்மை அவன்
கடலின் ஆழம் அவன்
கங்கையின் துய்மை அவன்
சிப்பிக்குள் முத்தும்
அவன்.... அவன்... அவன்.....

என் விழி ஆனவன்
காணும் பொருள் ஆனவன்
என் உயிரானவன்
என்னை தொடரும் நிழலானவன்
நான் விடும் மூச்சானவன்
அவன்.... அவன்... அவன்...

என் கண்களை காக்கும்
இமையானவன்
என் இதயத்தின்
துடிப்பானவன்
என் உயிர் மூச்சானவன்
அவன்... அவன்.... அவன்...

நான் வாசிக்கும் கதைகளின்
நாயகன் அவன்
நான் எழுதும் கவிதைகளின்
தலைவனவன்
எனது உள்ளம் திருடிய கள்வனவன்
என் உடலோடு பிணைந்து
என் உயிரோடு இணைந்து
என் உயிரோடு உயிரானவன்
அவன்... அவன்.... அவன்....

எழுதியவர் : நித்யஸ்ரீ (17-Sep-16, 10:06 pm)
பார்வை : 164

மேலே