தண்ணீருக்கு இரத்தம்

தண்ணீருக்காக இரத்தம் சிந்தி தவிக்கிறது தமிழகம் !
போராட்டங்களெல்லாம் பொழுதுபோக்காய் மாற -
அடிதடியெல்லாம் அரசியலாகிறதே !

பொதுசொத்துக்களை அழிக்கிறாய் !
பொதுமக்களை வதைக்கிறாய் !
பொல்லாத வீரனென்று -
பொட்டத்தனத்தை காட்டுகிறாய் !

உடலுக்குள் செல்லும் இரத்தத்தை -
கைகளுக்கும் கால்களுக்கும் போகாது தடுத்தால் ?
உயிர் இருந்தும் ஊனமன்றோ?
"பாரத தாயின்" நிலை இதுதானே !

உழைப்பின்றி வரும் தண்ணீரை உனதாக்க -
உனக்கென்ன உரிமை?
தடுப்பணை போட தயிரியம் தந்தது யார் ?
இயற்கையை அரசியல் ஆக்க நினைத்தால் -
இல்லாது போவாய் !

இதயம் கனத்தால் -
இமயமலையும் கலங்கும் !
இரும்பு கரம்கொண்டு ஒடுக்கமுடியாத சட்டம் -
ஒளிந்துகொண்டதா, ஓய்வெடுக்ககிறதா ?

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (18-Sep-16, 12:28 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 99

மேலே