உயிராய் அவள்

அகத்தினுள் நிறைந்த அலங்கார சிலை அவள் ​
​அன்பால் என்னை ​அணைத்து ஆள்பவள் அவள் !

ஆகாயம் அளவு ஆசையுடன் என்னைக் காப்பவள்
ஆடவள் அவளும் ஆசியபத்தி அழகுடன் மிளிர்பவள் !

​இதயத்தில் நிறைந்த இலக்கியம் என்றும் எனக்கவள்
​இன்பத்தை வழங்கிடும் இன்னிசை நாளும் எனக்கவள் !

ஈட்டிடா செல்வமவள் ஈடில்லா இணையிலா அழகியவள்
ஈரமுள்ள இதயமுடன் ஈடுகொடுக்கும் இனிய நெஞ்சமவள் !

உவகைப் பெருக்குடன் உள்ளம் மகிழ கூறுகிறேன்
உள்ளத்தில் நிறைந்த உலகமகா பேரழகி எனக்கவள் !

ஊற்றெடுக்கும் நெஞ்சில் ஊரணியாய் உனை நினைத்தால்
ஊக்கமளிக்கும் எனக்கும் ஊர்க்குருவியாய் சுற்றும் மனமும் !

எல்லையும் மீறுகிறது எந்தன் உள்ளம் சிலிர்க்கிறது
என்னுள் வாழ்கிற என்னுயிரே உன்னை நினை​க்​கையில் !

ஏக்கத்துடன் கழிகிறது ஏழிசை நாயகியே உன்னால்
ஏற்றிடுக என்னை ஏந்திடுவேன் எந்நாளும் இதயத்தில் !

ஐம்புலனும் அடங்குது ஐயமில்லை அலங்கார நாயகி​யவள் ​

ஐம்பொன் சிலைய​வள் ஐந்தருவி அழகு​ள்ள அற்புதம​வள் ​ !
ஒப்பிலா​ ​இல்லாள் ஒளிர்ந்திடும்​ ​இல்லத்தின் விளக்கவள்

ஒருமித்தக் கருத்துடன் ஒன்றிட்ட ​அன்பான நெஞ்சமவள் !
​ஓயாது உச்சரித்தும் ஓய்ச்சல் அடையா என்மனது

ஓய்வான நேரத்திலும் ​ஓலமிடுது உன் பெயரை !

​​ஒளடதமே நமக்கு ஒளவையின் தமிழ் என்றும்

ஒளசித்தியம் படைத்த ஒளவையின் வாக்கே நன்று !

-----------------------------------------------------------------------------
( ஆசியபத்தி = தாமரை மலர் )

( ஓய்ச்சல் = அசதி , தளர்ச்சி )

( ஒளடதம் = மருந்து )

( ஒளசத்தியம் = தகுதி )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Sep-16, 10:40 pm)
பார்வை : 469

மேலே