வயொதிக காதல்

இயற்கையே உன் கூந்தலுக்கு
வெள்ளைச்சாயம் பூசிவிட்டது!

உன் விழிகளிலிருந்துப் பாயும்
அம்புகள் தேய்ந்துவிட்டது!,

வறண்ட நிலம் போல் உன்
தோல் சுருங்கிவிட்டது!,

ஆனாலும், இன்னும் நான்
உன்னை நேசிக்கிறேன் !!,

நல்லவேலை நம் பிள்ளைகளே
நம்மை தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்கள் முதியோர் இல்லத்தில், இனி கவலையின்றி காதலிக்காலம்!,

ஆம் , வயதாகிவிட்டது நமக்கு
மட்டும்தான் நம் காதலுக்கு
அல்ல!!!....

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (18-Sep-16, 10:58 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 127

மேலே