நின்னு
ஒருவர்:- தலைவரே! இப்ப எதுக்காக காரை ஓரமா நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி நின்னு, பொண்ணுங்க தண்ணி புடிக்க வரிசைல நிக்கறதை பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்கீங்க..? இப்ப நீங்க "மந்திரி"ங்கறதை மறந்திடாதீங்க!
தலைவர்:- அட அதுக்கில்லய்யா! எதிர்க்கட்சிக்காரன் நம்ம தொகுதியில கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் தினமும் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து தவிக்கிறார்கள். மந்திரியால ஒரு நாளாச்சும் நின்னு பார்க்க முடியுமான்னு சவால் விட்டான்யா..., அதான் "நின்னு" பார்த்துக்கிட்டு இருக்கேன்யா!
ஒருவர்:-?