கட்டுண்ட காவேரி
களிமுகம் காண வரும் காவேரி தாயை அணைகள் கட்டி அழுக வைக்கும் கன்னடத்தின் விழுதுகளே,
இந்த பார் அறிந்த உன் மண்ணின் தொழில்நுட்ப பெருமையல்லாம்
கார் எரித்தும் கடை உடைத்தும் கருகத்தான் விட்டீரே,
நம் பாட்டன் பூட்டான் சேர்த்து வைத்த திராவிடத்தின் பெருமையல்லாம்
தண்ணீரை தர மறுத்து தலை குனிய வைத்தீரே,
நாங்கள் அன்னான் தம்பியாக தானே அண்டை மண்ணை நினைக்கின்றோம்
உன் அடிக்கும் கொளுத்தும் கரங்களுக்கோ அதுவேனோ புரியவில்லை,
பாரதத்தின் உச்சியிலே அணை திறக்க ஆணையிட்டும்
பக்கத்து ஊர்காரன் பங்கு தர மறுக்கின்றாய்,
யானை கட்டி போர் அடித்த என் மண்ணின் பெருமையெல்லாம் அணைகள் கட்டி அழிக்கத்தானா
நீ ஆயுதங்கள் ஏந்துகிறாய்,
தமிழகத்தின் பெயர் பலகை தாங்கி வரும் வாகனத்தை தடயங்கள் ஏதுமின்றி தழலிட்டு கொழுத்துகிறாய்,
உன் திமிர்பிடித்த தெருவெங்கும் இரவெல்லாம் பகலாக்க
என் நெய்வேலி நிலக்கரிதான் நித்தம் நித்தம் எரிகிறது,
பன்னாட்டு சந்தையிலே உன் பொருட்கள் அலங்கரிக்க என் மண்ணின் துறைமுகங்கள் உன் பொருளை சுமக்கிறது,
என் மீசை மாமன் ஓசை கேட்டால் ஓடி ஒளிந்து கூட்டமெல்லாம்
இன்று ஒற்றை தமிழன் சிக்கிவிட சிறுத்தைகளாய் சிலிர்க்கிறது,
அணை மதகை அடைக்கிறது,
குருதியெங்கும் வீரம் கொப்பளிக்கும் தமிழர் கூட்டம்
அன்பென்ற அணையமைத்து அமைதியாக இருக்கின்றோம்
எங்கள் அணை திறக்கும் முன்பு உங்கள் அணையை திறக்க விடு,
எங்கள் நதியை நடக்க விடு.