தமிழின் அழகே
பாலும் கசக்கவில்லை
பிழிந்த துணியும் கசக்கவில்லை
என்று நயம்படச் சொன்னான்
புலவன்
சாகும் தருவாயில் கூட.
தமிழின் அழகே அதனின்
இயம்புதலில்.
அதன் சிறப்பே அதனின்
தனித்தன்மையில்.
செல்வோமா என்பதை போவோமா
கிளம்புவோமா, பார்ப்போமா
என்று பல விதமாக
நேரம் காண்பதாக
உரைப்பது
என்னே அழகு.
இதே போல் எத்தனையோ
எடுத்தாள எண்ணம்
வியப்பு மேலிட பெருமிதம்
பொங்க மகிழ்வுறுகிறேன்
தாய்த் தமிழை
உணர்ந்து.