இராணுவ சகோதரனே
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டி பார்க்க மாட்டேன்..!
எவனுடைய தாயோ அழுகிறாள்,
எவனுடைய மனைவியோ விதவையாகிறாள்,
எவனுடைய பிள்ளையோ அநாதையாகிறான்.
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்..!
அந்த தீவிரவாதி மட்டும்
என் வீதியில் நுழைந்திருந்தால்..!
அது தான் வேறொரு தாய் அழுகிறாளே...!
அந்த தீவிரவாதி என்னை சுட்டிருந்தால்...!
அதுதான் வேறொருத்தி
விதவையாகிவிட்டாளே..!
அங்கே நான் இறந்திருந்தால்..!
அதுதான் வேறொரு பிள்ளை
அநாதை ஆகி விட்டதே..!
என் ஜென்னல் உடையும் வரை,
நான் எட்டிபார்க்க மாட்டேன்.
என் இராணுவ சகோதரனே..!
என்னை போல நீயும்
ஜென்னல் உடையட்டும்
என்று இருந்திருந்தால்
நீயும் உன் பிள்ளையுடன்
இருந்திருப்பாய் அல்லவா....!
என் ஜென்னலும் உடைந்தடா...!
உன்னிடத்தில் என்னை
நினைகையில்...!
கண்ணீருடன் கலங்குதடா...
கண்களும் நெஞ்சமும்....!
எனக்காக உன் உயிரை குடுத்துவிட்டாய்,
உனக்காக நான் ஒன்றும்
செய்ததில்லை என் நண்பா..!
கொடிக்கு காசுக்கொடுத்தது,
இந்த கவிதை எழுதியதை
தவிர....!
மன்னித்துவிடு என்னை..!
மரணித்த என் இராணுவ சகோதரனே.!