நண்பன்
நண்பனே! என் ஆருயிர் தோழனே!
உன்னை தான் மலை போல்
நம்பி இருந்தேன்...
நீ ஆபத்தில் இருந்தபோது
அதை நான் அறிந்த போது
ஓடோடி ஓடி வந்தேன்
தலை தெறிக்க...
நான் தவித்த தவிப்பு
உனக்கு துளி கூட இல்லையா?
நண்பன் என்று என்
மனம் மட்டும் தான்
சொல்கிறதோ...
உன் மனதில் அப்படி ஒரு
எண்ணம் சிறிதளவும் இல்லையோ?
இன்று நான் ஆபத்தில்
இருக்கிறேன்... நேரம்
இல்லை என்று அருகினில்
இருந்தும் கூட...
அலைபேசியில் நலம்
விசாரிக்கிறாயே?