காதலை சொல்லிட்டேன்

ஞாயிற்று கிழமை, காலை 10 மணி இருக்கும்!

மகள்: அப்பா ரொம்ப நாளாஉங்க கிட்ட ஒரு விஷயம் பேசணம் ன்னு இருந்தேன். டைம் இருக்கா? over a coffee?!
அப்பா: Sure. சொல்லு மா!
மகள்: என் ஜாதகம் விஷயமா நேத்து அம்மா கிட்ட பேசிட்டு இருந்தெங்கல்ல பா, அதுக்கு முன்னாடி என் மனசுல இருக்கறத சொல்லிட்டா we can avoid embarrassing situations!
நான் ஒருத்தர love பண்றேன் பா. என் school college -ஒ office -ஒ இல்ல.. ஒரு blood donation camp-ல பாத்தேன். அப்பறம் அப்படியே சில camps and common events -ல பழகி.. அப்பறம். . . .
அப்பா: you fell in love!
மகள்: அமாம் பா . We fell together! அவரயே தான் கல்யாணம் பண்ணிக்கணம்னு ஆசைபடறேன்!
அப்பா: உன்னோட அவர் என்னம்மா பண்றார்?
மகள்: அவர் Cinema -ல director ஆகனம்னு try பண்ணிட்டு இருக்கார் பா.

உடனே எதிர்க்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் வாயடைத்து போன அப்பா, இரண்டு நிமிடம் யோசித்தார். பின் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

அப்பா: உனக்கு நம்ப ராமகிருஷ்ணன் uncle தெரியும்ல மா?
மகள்: தெரியும் பா. உங்க college friend!
அப்பா: Actor-a chance தேடி தான் மா அவன் சென்னை கே வந்தான். அவன் அந்த காலத்துலேயே famous model . பெரிய பெரிய companies கெல்லாம் ads பண்ணான். அப்பறம் கொஞ்ச நாள் lightman -a இருந்தான். அப்டியே படி படியா மேல போய்டலாம்னு bank வேலையெல்லாம் விட்டான் மா. அப்பறம் நாங்கெல்லாம் வேலைக்கு போய்டோம் so அவனோட touch விட்டு போச்சு. ரொம்ப நாள் கழிச்சு அவன mylapore கோவில் ல பாத்தேன் மா.

மகள்: அப்போ என்னப்பா பண்ணிட்டு இருந்தாரு?
அப்பா: Acting விட்டான் மா. நாலஞ்சு கதை எழுதி வெச்சுட்டு Director-a chance தேடி அலைஞ்சிட்டு இருந்தான்! நலம் விசாரிச்சுட்டு bus வந்ததும் நான் ஏறி வந்துட்டேன். அதுக்கப்பறம் போன வாரம் எதேற்சியா பக்கத்துல library-கு போயிருந்தேன் அங்க அவன ஒரு book keeper- a பாத்தேன்!
இதான் மா cinema. 'நினைப்பவர் வருவதில்லை வருபவர் நிலைப்பதில்லை!'. அவன் இழந்த எதுவுமே அவனுக்கு இனிமே திரும்ப வராது. பருவத்துல நண்பர்கள், Cinema -க்கு equal-ஆ அவன் Love பண்ண பொண்ணு, bank job , இப்டி சொல்லிகிட்டே போகலாம்மா. lost is lost! இனிக்கு ஆஞ்சு ஓஞ்சு உக்காந்துட்டான்! ஒரு friend-ஆ அவன பாக்கும் பொது பரிதாபப் படலாம். ஆனா அதே என் மகளுக்கு ன்னு வரும்போது I don't want to play the game of dice.
ஒரு happy life க்கு பணம் வேணும் !
கண்டிப்பா வேணும்!
சந்தோஷமா வாழ பணம் ரொம்ப அவசியம்! and everybody deserves to be happy!

அப்பா காத்த அதே மௌனத்தை இவளும் காக்கிறாள். ஐந்து நிமிடங்கள் கழித்து அப்பாவை பார்க்கிறாள்.
மகள்: என் கூட வாங்க பா ஒரு இடத்துக்கு போகனம்.
அப்பா: இப்போவா?
மகள்: ஆமாம் பா இப்போவே தான்!

இருவரும் scooty-இல் ஏறி கிளம்ப, சற்று நேரத்தில் ஒரு பெரிய compound சுவர் தென்பட்டது. அந்த gate-இல் வண்டி நுழைய, "அன்னை இல்லம்" என்ற board அப்பா கண்ணில் பட்டது. வண்டியை நிறுத்தி உள்ளே சென்றனர்.
ஒரு பக்கம் பார்வை இழந்த குழந்தைகள் brail பாடங்கள் கற்கின்றனர். ஒரு பக்கம் ஊனமுற்ற குழந்தைகள் வரிசையாக அமர்ந்து கடவுள் வாழ்த்து பாடினார். இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொலைவில் ஒரு கூட்டம் ஓடிக்கொண்டும், தாவிக்கொண்டும், ஆளுக்கு ஒவ்வொன்று செய்துக்கொண்டும் இருந்தனர். அருகில் ஒரு buidling-இல் "mental rehabilitation center" என்று எழுதி இருந்தது!
இதையெல்லாம் வியப்புடனும் மனதில் கணத்துடனும் அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார்.
மகள்: இந்த bench ல உக்காரலாம் பா.
அப்பா: (மௌனம்)
மகள்: அப்பா..
அப்பா: இங்க எதுக்கு மா கூட்டிட்டு வந்த?
மகள்: அப்பா, நான் பிறந்ததுலேந்து இன்னிக்கு வரைக்கும் நீங்க எனக்கு எவளவோ கத்து குடுத்துர்கேங்க பா. I am all what you've sculpted me. I thought its my time to tell you something too.
அப்பா,நீங்க சொன்ன மாதிரி, சந்தோஷமா வாழ பணம் தான் முக்கியம்னா; everybody deserves to be happy-னா differently abled children ஓட பணக்கார அப்பா அம்மா என் பா happya இல்ல? ? or இப்போ இங்க பாத்தேன்களே kids, youngsters and elders, இவங்க எல்லாம் இவ்வளோ கஷ்டத்துலயும் எப்டி பா happya இருக்காங்க? சந்தோஷமா வாழ பணம் தான் வேணும்னா இவங்கள எல்லாம் சரி பண்ணிடலாமே!
அப்பா: விதி ன்னு ஒன்னு இருக்கே மா.
மகள்: எல்லாம் விதிதான்னா அப்பறம் எதுக்குப்பா பணம்?
ஒத்துக்கறேன் பா to some extent , பணம் வேணும், சந்தோஷம் வேணும். BUT, சந்தோஷமா வாழ பணம் மட்டும் போதாது! life is too short to ask for the cake and eat it too பா!
நீங்க பாக்கற doctor-ayo enginerr-ayo கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் பூரா 'ஒருவேள நமக்கு பிடிச்சதயே செஞ்சிருக்கனமோ ?' ன்னு வருத்தபட்டுட்டு இல்லாம, I love him! and I'll strive hard to get him, கடவுள் எனக்குன்னு என்ன எழுதி வெச்சிருந்தாலும் அத வாழ நான் தயார்!
கடேசி காலம் வரைக்கும், இன்னும் இத செஞ்சுர்க்கலமோ அத செஞ்சுர்க்கலமோன்னு regrets ஓட வாழறதுக்கு பதிலா மனசுக்கு எது happiness னு படுதோ அத செஞ்சுட்டு போலாம் பா.
நான் இந்த உலகத்த பாத வரைக்கும், புரிஞ்சுகிட்ட வரைக்கும் இன்னிக்கும் நீங்க uncle மாதிரி ஆள் கிட்ட போய் 'what's your biggest REGRET in life' ன்னு கேட்டேங்கனா, நான் இன்னும் கொஞ்ச நாள் try பன்னிர்க்கலம். அவசர பட்டுட்டேன்னு தான் சொல்லுவாங்க. இத நீங்க அவங்களோட deathbed ல கேட்டாலும் அதையேத்தான் சொல்லுவாங்க. .

அப்பாவின் கையை பிடித்து,
மகள்: எனக்கு அது வேணாம் பா!! என் தேவை regrets இல்லாத life !
நான் happiness ன்னு நெனைக்கற life ! அத தாங்க. .

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, நாம் பெற்ற மகளா இன்று எனக்கே இவ்வளவு தெளிவா ஒரு விஷயத்தை உணர்த்திகிறாள்?! என்று மனதில் நினைத்து வார்த்தையால் அதை சொல்ல முடியாமல் அவள் கையை பற்றினார்! அவள் அவரை அணைத்துக்கொள்கிறாள்.

அப்பா: உன் தெளிவான என்னங்கள பாக்கும் பொது ஒரு அப்பாவா எனக்கு வியப்பாவும் பெருமையவும் இருக்கு! அனா இது ஒரே நாள்-ல decide பண்ற மாதிரி விஷயம் இல்லம்மா. யோசிக்க time குடு. அதே சமயத்துல அவரையும் வர சொல்லு, இதே தெளிவு அவர் கிட்டயும் இருக்கான்னு பாக்கறேன்! but all said and done! ஒரு ஆரம்பமே இல்லாத என் யோசனைக்கு இப்போ நீ பேசினது ஒரு தெளிவ தந்துது. இனி போக போக பாத்துக்கலாம்கர நம்பிக்கை வந்துருக்கு. . it is not a yes from me! but let's see!

பையிலிருந்த cell-phone ஐ எடுத்து அவருக்கு msg அடிக்கிறாள்!
"காதலை சொல்லிட்டேன்"

காதலித்தவரையே திருமணம் செய்வது காதலின் வெற்றியல்ல! அதற்க்கு முன்னும் பின்னும் அந்த முடிவு செரியானதென்று நிரூபிப்பதே! இவள் காதலை சொன்னது முதல் அத்தியாயம் தான். . .

எழுதியவர் : பாரதி (22-Sep-16, 2:07 am)
சேர்த்தது : பாரதி
Tanglish : kaadhalai solliDDEn
பார்வை : 511

மேலே