துமீரா --- உரையாடல் குறுங்கதை
யாரடி தங்கம் துமீரா- ன்னு கூப்படற?
@@@#####
நா யாரடி கூப்படப்போறேன் பொன்னி. எஞ் செல்லப் பொண்ணத்தாங் கூப்படறேன்
####ஃஃஃ
என்னடி நியாயம் இது? மீரா-ங்கற பேரு ரொம்பவும் பிரபலமான பேரு. ஒரு தெருவுக்கு நாலு ப்ரியா, நாலு ஸ்வேதா- ன்னுதான் நானும் கேள்விபட்டிருக்கிறேன். துமீரா -ங்கற பேர நாங் கேள்விப்பட்டதே இல்லடி.
@######
அடியே பொன்னி உலகத்தில யாருக்கும் வைக்காத இந்திப் பேரா எம்பொண்ணுக்கு வைக்க ஆசப்பட்டேன் . .அந்த ஆசையின் விளைவே துமீரா
@#######
அது சரி. இந்த துமீரா-ங்கற இந்திப் பேர எப்பிடீடி தங்கம் கண்டு பிடிச்ச?
###########
எல்லாம் நம்ம தொலைக் காட்சி நிகழ்ச்சிங்களப் பாத்து கத்துக்கறதுதான். உரையாடல்ல துமாரா, துமாரா-ன்னு அடிக்கடி ஒரு பையனப் பாத்து சொல்லுவாங்க . பையனுக்கு துமாரான்னா பொண்ணுக்கு துமீரா-ன்னு
வச்சத்தாம் பொருத்தமா இருக்கும்னு
நாந்தான் எம் பொண்ணுக்கு துமீரா-ங்கற பேர வச்சேன்.
######
பரவால்லடி நல்ல புதுமையான
பேராத்தாம் வச்சிருக்க வாழ்த்துக்கள் . பேருக்கான அர்த்தம் தெரியாட்டி பரவா இல்லடி தங்கம். இந்திப் பேரா மட்டும் இருந்தாப் போதூம்.
#######@@@@@@@#@@@@@#####
இந்திப் பெயர் மோகம், தமிழர்களின் தணியாத தாகம். இதைச் சுட்டிக்காத் தான் இந்தத் துணுக்கு.
##
விருப்பம் உள்ளவர்கள் பகிர்ந்தளிக்கவும்.