பொறியியலாளன் சு மகாதேவன்

சுப்பிரமணியம் மகாதேவன், இலங்கை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற ஒரு இளம் விசைப் பொறியியலாளன் ( Mechanical Engineer) . அங்கு சில வருடங்களாக சிறீ லங்காவில் வேலை செய்தபி;ன்னர் கனடாவுக்கு பொருளாதாரக் காரணங்களுக்காக புலம் பெயர்நதவன். இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்றமாதிரி, கனடா போனால் கை நிறைய பணம் சம்பாதிக்கலாம், அங்கு படித்த மாமன் மகளைத் திருமணம் செய்யலாம், தனது வாழக்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம், சந்தர்ப்பம் கிடைத்தால் செல்வம் கொழிக்கும் பூமியான அமெரிக்காவுக்கு காலடி எடுத்து வைக்கலாம் என்ற பல கனவுகளுடன் கனடா வந்து இறங்கிய இளைஞர்களுள் மகாதேவனும் ஒருவன். சிறீ லங்கா அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் சிரேஷ்ட பொறியியலாராக தொழில் புரிந்த அவன் அக் காலச்சாரத்தில் ஊறியவன். பதவி உயர்வுக்காக விழுந்து விழுந்து சிங்களம் படித்துச் சித்தி பெற்றவன். மேசையில் உள்ள மணியை அடித்தவுடன் உடனே ஓடி வந்து “என்ன வேண்டும் மாத்தயா?” என்று முன்னுக்கு கைகட்டி நிற்கும் பியோன் பண்டா. வேலை சம்பந்தப்பட்ட கடிதங்களை மேசையில் இருக்கும் கணினியல் தானே தயாரிக்கத் தெரியாமல், தனக்கென வேலை செய்யும் பெண் செக்ரட்டரி ஒருத்தியின் உதவியை அடிக்கடி நாடும்; நிலமை, நினைத்த நேரம் வேலைக்கு வருவது , நினைத்த நேரம் போவது போன்ற தானே உருவாக்கிக் கொண்ட சலுகைகள் , இப்படியான சூழ்நிலையில் வேலை செய்து அனுபவம் பெற்றவர் சுப்பிரமணியம் மகாதேவன். கனடா வந்ததும் “ பெயர் மிகவும் நீண்டு போச்சுது என்று நண்பர்கள் கேலிசெய்ததினால் சுருக்கமாக “தேவ்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். இது கனடா கலாச்சாரம்.

கையில் தான் தயாரித்த பயோ டேட்டாவை கனடாவில் பல காலம் இருக்கும் நண்பன் ஒருவனுக்கு காட்டி “இதெப்படி இருக்கு மச்சான். பார்த்து சொல் என்றான்”. அதை வாசித்து விட்டு அவன் “ தேவ் இது சிலோனில் வேலைக்கு விண்ணப்பிக்க மாதிரியல்லவா தயாரித்திருக்கிறாய். உனது பிறந்த திகதி , இனம் , பாஸ் போர்ட் நம்பர் எல்லாம் இங்கு போடுவது கிடையாது. முதலில் சுருக்கமாக நீ தேடும் தொழிலின் நோக்கம் என்ன என்பதை நாலு வரிக்குள், வாசிப்பவர்களைக் கவரக் கூடய மாதரி எழுத வேண்டும். அதன் பி;ன்னர் முன்பு வேலை பார்த்த இடங்களில் நீ சாதித்தவை என்ன என்பதை விளக்கமாக எழுது. அதன் பி;ன்னர் நீ எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை எங்கு வேலை செய்தாய். நீ வகித்த பதவி என்ன. நீ செய்த வேலையின் விபரம் பற்றி எழுது. அதையடுத்து நீ பெற்ற பட்டங்களையும், பயிற்ச்சிகளையும் குறிப்பிடு. முக்கியமாக கணனித் துறையில் உனது திறமையை விளக்கமாக குறிப்பிடு. ஆரம்பத்தில் உனது பெயர் விலாசம் தொலைபேசி எண்ணுடன்; உன் மின் அஞ்சலையும் எழுத மறந்துவிடாதே. உனக்கென வெப்பக்கம் உன் படத்துடன் இருந்தால் அது ஒரு பிளஸ் பொயிண்ட் ”

தேவுக்கு இவை புதுமையாக இருந்தது. வெப் பக்கமா . அது என்ன என்று யோசித்தான். அதைப் பற்றி நண்பனிடம் கேட்பது தன் அறியாமையை வெளிபடுத்தவது போலாகும் என நினைத்து பேசாமல் இருந்து விட்டான். தன் பயோ டேட்டா முழுவதையும் மாற்றி அமைத்து, வேலைகளுக்கு விண்ணப்பிக்த் தயாரானான்.

“ தேவ். இன்னொரு ஆலொசனையை உனக்கு கூற மறந்துவிட்டேன.; இணையத்தளத்தில் வேலை தேடி விண்ணப்பிப்பது இலகு. றுழசமழிழடளை போன்ற வெப் பக்கங்கள் உனக்கு உதவியாக இருக்கும். உனது பயோ டேட்;டாவை அதன் மூலம் விளம்பரம் செய். உனது அனுபவத்தை பார்த்து, உன்னோடு ஸ்தாபனங்கள் தொடர்பு கொள்ள வாய்ப்புண்டு.” என்றான் நண்பன்.

வந்து ஆறு மாதங்களாகியும்; அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. கையில் கொண்டு வந்த காசும் கரைந்து விட்டது. மாமாவிடம் போய் காசு கேட்க அவனது சுயமரியாதை இடம் கொடுக்கவிலலை. வேலை இல்லாமல் மாமா வீட்டை போனால் மச்சாள் லதா என்ன நினைப்பாள்? அதனால் போனில் மட்டும் அவளோடு பேசிக் கொள்வான். அவளுக்கோ தமிழ் சரியாகப் பேச வராது. அவள் பிறந்தது கனடாவில். தேவ் கவலைப் படுவதைக் கண்ட அவன் நண்பன், தான் சூப்பர்வைசராக வேலை செய்யும் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் தேவப்படுகிறது என அறிந்ததும் அதைப் பற்றி தேவுக்கு சொன்னான். “எனது தொழிற்சாலையில் மோட்டார் வாகனத்துக்கு தேவையான உதிரிப் பாகங்கள் தயாரிக்கிறார்கள. தொழிற்சாலயில் உற்பத்தியாகும் பொருட்களை ஒவ்வொன்றாக இயந்திரத்தின் மூலம் பரிசோதித்து ஒரு பெட்டிக்குள் வைத்து பக் செய்யும்; வேலையுண்டு. வருகிறாயா ? “ என்று தேவி;ன் நண்பன் அவனைக் கேட்டான்.

“அந்த வேலைக்குப் போக எனக்கென்ன பைத்தியமா? நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சிறீலங்காவில் பெரும் பதவியில் இருந்தனான். எனக்கு கீழ் பல தொழிலாளர்கள் வேலை செய்தவர்கள். இங்கு நான் சாதாரண தொழிலாளியாக எப்படி ஒருவருக்கு கீழ் வேலை செய்ய முடியும்? என் இனத்தவர்கள் அறிந்தால் என்ன சொல்லுவார்கள்? இதற்காகவா நான் கனடாவுக்கு வந்தனான்?” தேவ் பொருமினான்.

“ தம்பி தேவ் நீ நினைத்த மாதரி இல்லை கனடா, வந்தவுடன் வேலை கிடைக்க. நீ முதல் தடவையாக நேர்முகப் பரீட்சைக்கு போனால் உனக்குத் தெரிய வேண்டிவரும் அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று. ஒன்றல்ல மூன்று இண்டர்வியூக்கள் நடக்கும். இங்கை எம்.பி யிண்டை துண்டோ அல்லத மந்திரியின்டை சிபார்சோ தேவையில்லை. திறமையும், அனுபவும,; கடும் உழைப்பும்;; தான் முக்கியம். அதோடு; கனேடிய அனுபவம் அவசியம். அதனால் தான் இங்கு ஒரு தொழிற்சாலையில் பல இனத்துவருடன் வேலை செய்து, இந்நாட்டு வணிக கலாச்சாரத்தை நீ தெரிந்து வைத்திருக்க வேண்டும் “ என்றான் நண்பன். அவன் சொன்னதில் நியாhயம் இருக்கிறதாகத் தேவுக்;குப் பட்டது.

“ என்ன சம்பளம் கொடுப்பார்கள்?” என்று கேட்டான் தேவ்.

“பெரிய சம்பளம் ஒன்றுமில்லை. இது நிரந்தரமான வேலையில்லை. கனடாவில் சட்டப்படி மணித்தியாலத்துக்கு குறைந்தது டொலர் 12.155 கொடுக்கவேண்டும். நீ ஏஜன்சிக்குள்ளாலை போனால் அவன் சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்துக்கொள்வான். என் மூலம் போகிற படியால் உனக்கு மணித்தியாலத்துக்கு 11.00 டொலர்கள் கிடைக்கும். அதில் வரி , காப்புறுதி. பென்சன் கழிவு போக டொலர் மணித்தியாலத்துக்கு 10.00 மட்டில் கிடைக்கும். ஒரு கிழமைக்கு 40 மணித்தியாலம் வேலை செய்தால் ஒரு மாதத்துக்கு குறைந்தது 1600 டொலர்கள் மட்டில் உழைப்பாய். உனக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவன் செக்கியூரிட்டி கொம்பெனி ஒன்று வைத்திருக்கிறான். சனி ஞாயிறுகளிலை அங்கையும் வேலை செய்யலாம். அதுவும் வருமதகமாகும்.. இங்கை இராப்பகலாய் பக்டரியில் வேலை செய்து வீடு, கார் வாங்கி நல்லாயிருக்கினம் பல பேர். அதோடை சில நேரம் ஓவர் டயிமும் கிடைக்கும்;. கிடைக்கிற பணம் உனக்கு தனி அறை வாடகை , சாப்பாடு , போக்கு வரத்து ஆகியவற்றிற்கு தாராளமாகப் போதும்; மாதம் மாதம் கொஞ்சம் மிச்சம் பிடிக்கலாம். ஊரில் இருக்கும் அம்மா அப்பாவையளுக்கும் அனுப்பலாம். கார் ஓட லைசன்ஸ் எடுத்தால் ஆறு மாதத்தில் ஒரு செக்கணட் ஹாண்ட் ஹொண்டா சிவிக்கும் வாங்கலாம். நீ கொழும்பிலை கார் ஓடினனீர் தானே? பிறகு கார் வாங்கின பிறகு மச்சாளையும் ஏற்றிக் கொண்டு படம் பார்க்கப் போகலாம்.”

“ ஓம் ஓடினானன். அது அரசாங்கத்தால் எனக்கு வேலைக்காக தந்த கார்”

“ அப்ப என்ன. இங்கை ஒட்டோமடிக் கியரிலை ஓடுறது இலேசு. அதை முதலில் பழகிக் கொள்ளும். அதோடை இங்கை லைசன்ஸ் எடுக்கிறது கஷ்டம். ஒரு சாரதி வகுப்பு போய் பழகுவது நல்லது”

தேவ் நண்பனின் ஆலோசனை படி தொழிற்சாலையில் ; பக்கிங் வேலைக்குப் போய் வேலை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்களில் கணினியை வாங்கி ஒரு இன்டெர்நெட்டு; இணைப்பையும்; பெற்றுக் கொண்டான். கணினியை பாவித்து அவனுக்குப் பழக்கமில்லை. அதனால் நண்பனின் ஆலொசனைப்படி நேரம் கிடத்த போது கணனி வகுப்புக்குப் போய் வரத் தொடங்கினாhன். போறிய-யல் படித்த அவனுக்கு அது வெகு இலகுவாக விளங்கக் கூடியதாக இருந்தது. அதன் மூலம் வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கினான். மின் அஞ்சல் பாவிப்பது அவனுக்கு புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அதோடு நண்பனின் ஆலோசனை படி பிரென்ச் மொழியையும் பேசக் கற்றுக் கொண்டான். தேவுக்கு டிரைவர் லைசன்ஸ் முதல் தடவையிலேயை கஷ்டமி;ன்றி கிடைத்தது. நண்பன் சிபாரிசு செய்த ஹொண்டா கார் ஒன்றை வாங்கி ஓடத் தொடங்கினான். அது மட்டுமா நம்பர் பிளேட்டில் கூட “தேவ்” என்ற தன் பெயரைப் பதித்துக் கொண்டான்.

ஒரு வருடத்துக்குள் கனேடிய கலாச்சாரத்துடன் இணையத் தொடங்கினான் தேவ். அவனது ஆங்கில உச்சரிப்பில் பல மாற்றங்கள். ஹலோ, பகர் ,சேர் போன்ற சொற்கள் மறைந்தன. உடையில் கூட டெனிம் கால்சட்டையில் ஒரு பிரகாசம். டிம் ஹோர்டன்ஸ் கோப்பியை அடிக்கடி விரும்பிக் குடித்தான். ஆங்கில உச்சரிப்புகளில் கனேடிய வாசனை வீசியது. தேவில் ஏற்பட்ட மாற்றம் அவனது நண்பனை அதிசயப்பட வைத்தது. வழக்கத்தில் ஊரில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்கள் குறைந்தது இரண்டு வருடங்கள் எடுப்பார்கள் கனேடியக் கலாச்சாரத்துடன் இணைவதற்கு. சிலர் இணைவதே கிடையாது. ஒதுங்கி வாழ்வதையே விரும்புவார்கள். தேவ் சரளமாக பிரெஞ்சு மொழி பேசியது அவனின் நண்பனுக்கு பெருமையாக இருந்தது. அதுவே அவன் வெலை செய்யும் மோட்டர் வாகன உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில வெகு விரைவில் மேற்பார்வையாளர் பதவி உயர்வு கிடைக்க உதவியாக இருந்தது.

;தொழிற்சாலையின் உரிமையாளன் கியூபெக் மாநிலத்தை சேர்ந்தவன். அவனது தாய் மொழி பிரென்ஞ். ஒரு நாள் தொழிற்சாலையை மேற்பார்வையிட அவன் வந்தபோது தேவ் அவன் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பதில் சொன்னது முதலாளிக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது காரியலத்துக்குள் தேவை அழைத்து சென்று அவனைப் பற்றி விசாரித்த போது தேவ் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற விசைப் பொறியியலாளன்; என அறிந்தார். அதனால் உதவி பொறியியலாளர் பதவி நிரந்தரமாக வருடத்துக்கு 40,000 டோலர் சம்பளத்தில் தேவுக்கு கிடைத்தது. தனது வேலை அனுபவத்தையும் கணினி அனுபவத்தையும் விளக்கி தனது பயோ டேட்டாவை மாற்றி இணைத் தளத்தில் வெளியிட்டான். தான் வேலை செய்யும் தொழ்றசாலையையும் பற்றி குறிப்பிட்டான். அத்தொழிற்சாலை பிரபல ஜீ எம் மோட்டர்சுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் இடமாகும்.


*******

தனக்கு வந்திருந்த மி;ன அஞ்சலைப்பார்த்ததும் தேவால் நம்பமுடியவிலலை. அதுவும் அவன் எதை எதிர்பார்த்து கனடாவுக்கு வந்தானோ அது நனவாகப் போகிறது போல அவனுக்கு தோன்றியது. அதுவும் அமெரி;க்காவில் உள்ள பிரபல ஜி எம் மோட்டர் ஸ்தாபனத்தி;ன பரிபாலன பகுதியில் இருந்து வந்திருந்தது. பதவி மோட்டார் உதிரிப் பொருட்களை விற்பனை செய்யும் சேல்ஸ் என்ஜினியர் பதவி அது. சம்பளம் வருடத்துக்கு 85,000 அமெரிக்க டொலர்கள். நேர் முகப் பரீட்சைக்கு வரமுடியுமா எனக் கேட்டு எழுதியிருந்தார்கள். போக வர பிளேன் செலவும், ஹொட்டல் செலவும் அவர்கள் பொறுப்பு. தன் நண்பனுக்கு விபரத்தை சொன்னான் தேவ்.

“ விடாதை மச்சான். உனக்கு வெள்ளி திசை அடிக்கத் தொடங்கிவிட்டது” என்றான் நண்பன். நேர் முகப் பரீட்சைக்கு அமெரிக்கா போய் வந்து ஒரு மாதத்தில் அவனுக்கு வேலை கிடைத்து ஒப்பந்தம் வந்தது. அமெரிக்காவுக்கு பயணமானான் தேவ். அதுவும் ஜி.எம் கம்பெனியில மிக உயர்ந்த பதவி. சலுகைகளுடன். வாழ்க்ககையின் வெற்றிப்படிகளில் அவன் விரைவாக ஏறத் தொடங்கினான். பலருடைய அறிமுகங்கள். தொடர்புகள். அவனது போக்கு மாறியது.

*******

போன புதிதில் லதாவுடன் அடிக்கடி தொடர்பு கொண்ட தேவ் காலப் போக்கில் தனது தொடர்பை குறைத்துக் கொண்டான். லதாவுக்குத் தெரியாது தேவுக்கும் அமெரிக்கன் பிரஜையான ஜெனிபருடன் ஏற்பட்டுள்ள நெருங்கிய தொடர்பு பற்றி. அத் தொடர்பு பின்னர் திருமணத்தில் போய் முடிந்த விடையம் தேவி;ன் நண்பனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.. தேவ் அமெரி;க்க பிரஜையாவதற்கு ஆயித்தங்கள் நடந்துகொண்டிருந்தது. மனிதன் உயர உயர போகும் போது ஆசைகளும் அவனைப் பின்பற்றி உயர உயரப்போகிறது. அதை அடைய தேவ் எதையும் செய்வான். சுயநலம் தலைதூக்கி நின்றது. தான் தாயகத்தில வாழ்ந்த வாழக்கையும் கனடா வந்து உத்தியோகம் தேடி அலைந்த நாட்களையும் நண்பன் செய்த உதவிகளையும் அவன் படிப்படியாக மறந்துவிட்டான். அச் சமயம் கொம்பெனியின் வியாபார விஷயமாக தேவ் நியூயோர்க் போக வேண்டி வந்தது. அதுவும் முக்கியமான கொம்பெனி மீட்டிங் ஒன்று நியூயோர்க் உலக வர்த்தக மையத்தில். பாவம் விதி யாரை விட்டது? உலக வர்த்தக மையத்தை 2004 ஆம ;ஆண்டு செபடடம்பர் 11ஆம் திகதி அல் குவைதா பயங்கரவாதிகள்; தாக்கியபோது பலியான ஆயிரக்கணக்கான மக்களில் தேவும் ஒருவன். அவன் கண்ட கனவுகள் அவனுடன் அக்கட்டித்துடன் புதைந்து விட்டன.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (22-Sep-16, 12:24 am)
பார்வை : 126

மேலே