காதல்

பேனா தூக்கும்
போதேல்லாம் கவிதை
வந்துவிடுவதில்லை...

உன் பெயரை
அழைக்கும் போது
கவிதை வராமல் இருந்ததில்லை ....

வானம் பார்த்த
போதெல்லாம்
நட்சத்திரங்கள் எண்ணவில்லை....

உன் புடவை
பார்க்கும் போதெல்லாம்
அதில் உள்ள பூக்களை எண்ணாமல் இருந்ததில்லை .....

காற்று வீசும்
திசையை ஆராய்ந்ததில்லை....

உன் சேலை
முந்தானை காற்றில் ஆடும்
திசையை ஆராயமல் இருந்ததில்லை ....

காதல் வந்த வழி தெரியவில்லை
காதலியே நீ வரும் வழி தெரியாமல்
இருந்ததில்லை ....

எழுதியவர் : கிரிஜா.தி (22-Sep-16, 7:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே