காதல் என் மின்சாரக்காதல்
நேர்மின்னூட்டம் என் கண்ணில் இருக்க
எதிர்மின்னூட்டம் உன் கண்ணில் இருக்க
இரு மின்னூட்டம் என் மனதில் இருக்க
நம் காதலை மின்தேக்கி வைப்பேனடி...!
காதல் ஆற்றல் பூக்கும் போது எல்லாம்
உன் விழியின் மின்னல் ஒளியும்
உன் மொழியின் காதல் ஒலியும்
என் இதயம் இடிதாங்குமடி...!
உன் காதல் இடை கண்டால்
என் காதல் அரைக்கடத்தியா...?
உன் காதல் முகத்தில் முத்தமிட்டால்
என் காதல் குறைக்கடத்தியா...?
என் காதல் அணுவை பிளக்கும்
அனல் மின் நிலையம் நீ...
என் காதல் கண்ணீரை கரைக்கும்
நீர் மின் நிலையம் நீ....
கடத்தும் பொருளாய் நான் இருக்க
கடத்தாப் பொருளாய் நீ இருக்க
இடையில் சிக்கி தவிக்கிறேன்
காதல் மின்தடையாய்...
-ஜ.கு.பாலாஜி-

