காவிரியின் வலி
காவிரியே
உன் பிறந்த வீடு
கர்நாடகா
நீ புகுந்த வீடு
தமிழ்நாடு
நீ புகுந்த வீடு
செல்ல உன்னைத் தடுப்பது
உன் அன்னையென்றால்
உதைத்துவிட்டு வா
அணையென்றால் அதை
உடைத்துவிட்டு வா
இங்கே உன் விவசாயப் பிள்ளைகள்
உன்னை குடிக்கமுடியாத சோகத்தில்
விஷத்தைக் குடிக்க முயல்கின்றனர்
சாகுபடி செய்த உன்
பிள்ளைகள் இங்கே
சாகும்படி செய்துவிட்டான் உன் தந்தை
உன்னை புகுந்த வீடு
அனுப்பாமல் கர்நாடகம்
ஆடுவதோ துர்நாடகம்
நம்மிடம்
கன்னடம் பிடிப்பதோ
வீண் அடம்
காவிரியைக் கேட்டால்
கைவிரிப்பே கிடைத்தது
ஆளும் கையோ கைவிரித்தது
ஆண்ட தாமரையோ
தரமறுத்தது
காவிரிப் பெண்ணே
உன்னை அனுப்ப மறுக்கும்
பெற்றோருக்கு கா விடுப்பெண்ணே
நாங்கள் முப்போகம்
விளைவிக்கக் கேட்கவில்லை
தமிழகத்தில் எதோ சிற்பாகம்
விளைவிக்கக் கேட்கின்றோம்
நாங்கள் கேட்பது
பிச்சை அல்ல
எங்கள் உழவனின் மூச்சை
கன்னடத்திலிருந்து
வருவதில்லை
தண்ணீர்
ஊற்றெடுத்து வருவதோ
எங்கள் கண்தடத்திலிருந்து
கண்ணீர்
உச்ச நீதிமன்றம்
உரைத்தும்
மிச்ச நீரைக்கூட
அனுப்ப மனமில்லை
எங்கள் வாகனங்களை
அடித்து நொறுக்கும்
அவர்களுக்கு மானமில்லை
ஒன்று மட்டும்
இதிலிருந்து புரிகின்றது
நாம் இந்தியர்கள் இல்லை
தமிழர்கள் என்று
காவிரியே வா
எங்கள் காதலியே வா
வந்து எங்கள் பஞ்சம் குறை
நெஞ்சம் நிறை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
