மயில்

உன் கொண்டையை பார்க்கையில்
மல்லிகை பார்த்த ஞாபகம்...
உன் தோகை விரித்து ஆடுகையில்
உலக அழகிகள் நடனமாடிய ஞாபகம்..
உன் உருவத்தை வைத்து
பல பெண்களை உவமையாக
கவிதை எழுதிய ஞாபகம்...
நீ நடத்து செல்கையில்
பூந்தோட்டம் நடந்து செல்லும் ஞாபகம்..
நீ விளையாட்டுகையில்
குழந்தைகள் துள்ளிக் குதிக்கும் ஞாபகம்...
என் ஞாபகம் உன்னை கண்டு..

எழுதியவர் : ப.தவச்செல்வன் (23-Sep-16, 1:11 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : mayil
பார்வை : 5187

மேலே